மதுரை
பதிவர் விழாவில் இனிய தோழி கவிஞர். திருமதி. மு.கீதா அவர்கள் எழுதிய நூலை
கையொப்பமிட்டு கொடுத்தார் ‘’ஒரு கோப்பை மனிதம்’’
பருகினேன் பருகப் பருக...
அமிர்தமாய், அற்புதமாய்,
அருமையாய்,
அமர்க்களமாய்,
ஆனந்தமாய்,
ஆச்சர்யமாய்,
ஆர்ப்பாட்டமாய்,
ஆக்கரோஷமாய்,
இதமாய்,
இன்பமாய்,
இமயமாய்,
இனிமையாய்,
ஈரமாய்,
ஈட்டியாய்,
ஈகைகுணமாய்,
ஈர்ப்புசக்தியாய்,
உணர்வாய்,
உரிமையாய்,
உவமையாய்,
உண்மையாய்,
ஊர்கோலமாய்,
ஊசிகுத்தலாய்,
ஊசிவெடியாய்,
ஊமைக்காயமாய்,
எந்திரமாய்,
எல்லாமாய்,
எளிமையாய்,
எகத்தாளமாய்,
ஏணியாய்,
ஏற்றமாய்,
ஏமாற்றமாய்,
ஏகாந்திரமாய்,
ஐயமாய்,
ஐயனாய்,
ஐதீகமாய்,
ஐம்புலனாய்,
ஒளியாய்,
ஒலியாய்,
ஒருமையாய்,
ஒழுக்கமாய்,
ஓர்உயிராய்,
ஓதுவாராய்,
ஓஷோனாய்,
ஓங்காரமாய்,
ஔவையாய்,
ஔவ்தடமாய்,
இப்படி....
அனைத்து உணர்வுகளும் என்னுள் படரக்கண்டேன், சிறு சிறு கவிதைகளில் கூட பெரும்
பெரும் தத்துவங்களை சொல்லமுடியுமா ?
கீழே
சில ஏக்கா தருகிறேன்.
சிதைவு
கோடரிச்
சொற்கள்
வீழ்ந்தன
உறவுகள்
பேச்சு
மௌனமாயிருப்பதால்
நிகழாமலில்லை
பேச்சு
நா
நயம்
தோற்றே
போனது
நாணயம்
தவறிய
நா
நயம்...
சமத்துவம்
அரசியல்
ஆண்களுக்கு
அரிசியியல்
பெண்களுக்கு
ச்சீ
ச்சீ
ச்சீ....
வெட்கம்
கெட்டவர்கள்
திட்டிக்கொண்டே
திரையிட்டுக்
கொண்டது
குளியலறைக்
கண்ணாடி....
எம்மை
மிகவும் கவர்ந்தது
தோட்டிச்சி
பாட்டி
இந்த
பாட்டிகளை நானும் கூட எமது வாழ்வில் கண்டு கடந்து வந்து இருக்கிறேன் ஆனால் ? எமக்கு தோன்றவில்லையே காரணமென்ன ? ஒருவேளை எமக்கு தோண்ட(தலையில்)இல்லையோ ?
வியக்கின்றேன், வியக்கின்றேன். இந்தக் கவிஞரை பாராட்டும் தகுதி எமக்கில்லை,
எமக்கில்லை. ஆகவே......
ந்னான்
ப்போறேன், வடக்கே... ய்யேன் ஜோலியப்பாத்துக்கிட்டு.
மதுரை பதிவர் விழாவில் தோழி தேன் மதுரத் தமிழ் கவிஞர். திருமதி. பிரதிபா
கிரேஸ் அவர்களும் ‘’துளிர் விடும் விதைகள்’’ என்ற தனது நூலை கொடுத்தார்கள். நான் என்ன ? இவர்களைப்போல் கவித்துவம் தெரிந்தவனா ? என்ன எழுதுவது ? ஒன்றும் தோன்றவில்லை வேறு
வழியின்றி தோண்டினேன் எமது மூளையின் மூலையோரத்தில், அதில் கிடைத்த துகள்களை
தூவியிருக்கிறேன் கீழே....
கவிதை படிப்பதின் முறையைக்கூட அறியாதவன் இப்பொழுதுதான் நண்பர் ‘’ஊமைக்கனவுகள்’’ மூலம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன், சரி இதன் மூலமாகவும் கவிதை படித்து
பழகுவோமே என இறங்கினேன் கடலில் மூழ்கி முத்தெடுத்தவன் நிலையானேன் ஆம் துளிர்
விடும் விதைகள் இது கீழிருந்து மேலோட்டம் நான் மூழ்கி மேலிருந்து கீழோட்டமானேன்
ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு நான் மீண்டும் சுயநினைவு பெற்று
மேல் நோக்கி வர நீண்ட நேரங்களானது அதாவது நூலை மூடும்வரை.
எதைச்சொல்ல, அதையா ? இதையா ?
(எதையாவது
சொல்லையா ? யாரது, இடையிலே ஆஸி. சொக்கனா ? ஏங்க ஒரு ஃபளோவா போயிக்கிட்டு இருக்கும்போது
குறுக்கே பேசுனா மறந்துட மாட்டேனே ? நீங்க பதிவு போடும் போது
நான் ஏதாவது சொல்றேனா ? கம்முனு குந்திகினு படிமே)
நானும் ரசித்தவை... பல அதில் சில உங்களின் பார்வைக்கு....
தமிழ்கொண்டே சென்றிடுவாய்
செவ்வாயோ
எவ்வாயோ எக்கிரகம்
சென்றிடினும்
தமிழ்கொண்டே சென்றிடுவாய்
!
அரிய இலக்கியம் படித்து, இதில் இலக்கியம் எதற்க்கு ? எனக்கேட்டு நம்மை குழப்பி விட்டு அவர் தரும் பதில்கள் அனைத்தும் அருமை.
புத்தாண்டை வரவேற்று...
தேன்மதுரத்
தமிழ் தித்திக்க
எட்டுத்திக்கும்
செந்தமிழ் கமழ
தமிழும்
தமிழரும் வளம்பெற
வருக
எம் இனிய புத்தாண்டே !
தூய்மை பேண...
நிலக்கடலை
கொறிக்கலாம் – ஆனால்
நீலக்
கடலை குப்பையாக்கலாமோ ?
நீ மட்டும் என்னுடனே...
மற்றவற்றை
நான் பார்த்துக்கொள்கிறேன்
நீ
மட்டும் என்னுடனே இருப்பாயா ?
தமிழே உதவ மாட்டாயா..
மென்மயிலிறகு
கொண்டு வந்து
கன்னத்தில்
இரண்டு போடவா ?
மேகம்... இதில் வந்த வரிகளை இவர் வானூர்தியில் பறக்கும்போது
எழுதியவையாகத்தான் இருக்ககூடும் வெண்பஞ்சு பொதிகளை வானூர்தி கீறிக்கொண்டு சிறிய
குலுக்கலுடன் பறக்கும் பொழுது அதை உணர்ந்து எழுதியிருக்கிறார்.
பிரமாண்டமாய்
உருவம் இருந்தாலும்
ஊடுறுவிச்
செல்லும் மென்மை !
உன் வாசம் நுகர்ந்தவுடன்... இதில் ஒரு பெண் தனது கணவனைக்குறித்து
எழுதுகிறாள் என நம்மை நினைக்கவைத்து முடிவில் மழையைக் குறித்தே என்பதை உணர்த்தி
நம்மை ஏப்ரல் மாதத்தில் முன்னிருத்தி விடுகிறார்.
பழகிய
மழையே
நீ
என்றும் அழகே
எப்பொழுதும்
இனிமையே !
விழிப்பாய் இரு தோழி !
வலை
விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்
கலை
மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி ?
பெண்ணித்தை காப்பாற்றும் பெண் புலியாய் சமூகத்தில் உலாவும் காமக்கொடூரன்களை
நரியென்றும், ஓநாயென்றும் சாடியிருக்கிறார்.
நானாக நான் இருத்தலில்... குழந்தை கேட்கிறது..
நானாக நான் இருத்தல் எப்பொழுது ?
நானாக நான் இருத்தல் பிழையா ?
கையெழுத்தை... இதில்..
அஞ்சல்
ஆவணம்
அனைத்தும்
கணினியில்
தொலைத்து
விட்டேனே
கையெழுத்தை !
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் வாழ்த்திக்கொண்டே போகலாம் ஆனால் ? அதற்க்கும் தகுதி வேண்டுமே.. இது
எமக்கு இல்லாத காரணத்தால் நானும் தகுதி வளர்க்கப் போகின்றேன்.
கவிஞர் பிரதிபா கிரேஸ் அவர்களுக்கு, கவிச்சுவை களித்த நன்றியுடன் சிறிய
ஆலோசனை, தவறெனில் மன்னிக்க...
\\ நூலில்
கூடுதல் இடம் இருப்பது காலி
குறைத்திருக்கலாமே அளவை தோழி \\
இனிய
நெஞ்சங்களே.... உங்கள் ‘’வால்மீகி’’யில் தற்போது காண்க...
அன்புடன்.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
தொடரும்
எமது நூல் அகத்தில்....
சரிதாயணம்
ஆவிப்பா.