தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 17, 2016

மெல்லத்தான் நினைக்கிறேன்...


இப்பதிவின் முந்தைய தொடர்பு பதிவுகளின் இணைப்புகள் கீழே...

பல்ராமன் பல் வலியால் துடித்தார் காரணம் அவரால் கறியை (ஆட்டுக்கறிதான்) கடித்து விழுங்க முடியவில்லை நாட்டில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பிரச்சினை இவருக்கு இப்படி. சரியென்று வீட்டுக்கு அருகில் இருக்கும் பல் டாக்டர். பரமேஸ்வரியிடம் போனார் பல்ராமன் இயல்பாகவே இசை ஞானம் உள்ளவர் இளம் வயதில் சினிமாவில் நுழைய முயன்றவர் ரெக்கார்டிங் தியேட்டரில் இவருக்கும் பாடகர் பித்துக்குழி முருகதாஸ் அவர்களுக்கும் ஏற்றபட்ட மனஸ்தாபத்தால் திரைத்துறையை தூரமாக ஒதுக்கி வைத்து விட்டு பருத்தி வியாபாரத்தை தொடங்கியவர் இரண்டே இரண்டு மனைவிகளோடு வம்ச விருத்தியை தொடங்கி 11 குழந்தைகளுடன் நலமுடன் வாழ்கின்றார் ஆனால் தற்போது பல்வலி பேசுவதைக்கூட பாடல் போன்றே வெளிப்படுத்துவார் டாக்டர். பரமேஸ்வரியும் சாதாரண பெண் இல்லை நாவில் கலைவாணியே வாடகை இல்லாமல் குடியிருக்கின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இவருக்கு இசையார்வம் உண்டு ஆனால் சவுச்சாலயத்தை (TOILET) விட்டு வெளியேறாது சரி இதோ இருவரும் பாடல் வழியாக உரையாடுகின்றார்கள்.

மெல்லத்தான் நினைக்கிறேன் பல் வலியால்
துடிக்கிறேன் கறி இருந்தும் மெல்வதற்கு
வழிகள் இன்றி தவிக்கிறேன் ஆ ஹா...
மெல்லத்தான் நினைக்கிறேன்..

கறியைக் கடித்தால் பல் வலிக்கும் அதனை
துறந்தால் வழி பிறக்கும் கறி எதற்கு
உமக்கு வயசாச்சு நீ யோசி அதை நீ யோசி
ஆ ஹா... மெல்லவா.. நினைக்கிறாய்...

கறியை வேக வைத்தால் சுவையாகும்
மனைவிகளிடம் சொன்னால் நலமாகும் நான்
சொல்வது அவளுகள் காதில் நுழையவில்லை நீர்
சொல்லல் அவளுகள் மனம் மாறும் என்நிலை தீரும்

நான் பல் டாக்டர் பரமேஸ்வரி நீ போக வேண்டியது
அட்வகேட் அழகேஸ்வரி உன் பல்லை புடுங்கவா
அதன் தொல்லை தீர்க்கவா நீ சொல்லு அதை நீ
சொல்லு ஆ ஹா... மெல்லவா.. நினைக்கிறாய்...

ஆணியே நீ புடுங்க வேண்டாம் வாயில் ஊறவைத்து
நான் கடிப்பேன் ஆளைவிடு ஆத்தா மகமாயி நான்
போறேன் வீட்டுக்கு கறியை ஊற வைத்தே நான்
கடிப்பேன் ஆ ஹா மெல்லத்தான் நினைக்கிறேன்...

சாவு கிராக்கி வந்து உயிரெடுக்குது இன்று முதல்போனி
அம்போனி நீ அம்போனு போவே நீ -உன் மொத்தப் பல்லும்
கொட்டணும் உனது சொத்து பூராம் அழியணும்
 ஆ ஹா மெல்லவா நினைக்கிறாய்... மெல்லவே முடியாது...

சிவாதாமஸ்அலி-
இந்த டாக்டரு எந்த ஊருக்காரி இப்படியா ? சிகிச்சை கொடுக்கிறது ? 

32 கருத்துகள்:

  1. போட்டுத் தாக்கறீங்களே... இந்த ஸீரிஸில் அடுத்து என்ன வரும்?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே யாரு கண்டா...... ஏதாவது வரும்.

      நீக்கு
    2. அடுத்தது கிள்ளத்தான் நினைக்கிறேன்.

      --
      Jayakumar

      நீக்கு
    3. ஐயாவின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. இரண்டே இரண்டு சம்சாரம் தானா.... ஹாஹா....

    சொல்லத்தான், கொல்லத்தான், மெல்லத்தான்.... அடுத்து என்னத்தான்?

    பதிலளிநீக்கு
  3. மெல்லத்தான் நினைக்கிறேன்,குசும்பான படம்.

    பதிலளிநீக்கு
  4. நான் சொல்லுவது அவளுகள் காதில் நுழையவில்லை ...பாடல் வாயிலாய் நல்ல கருத்தை சொல்லியிருக்கும் கில்லர்ஜி வாழ்க 'பல்'லாண்டு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதானே ஜி உண்மை நிலை... வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. பல்வலியால் அவதிப்படுவதை அருமையாக பாடலில் பதிவிட்டுள்ளீர்கள் நன்று

    பதிலளிநீக்கு
  6. அதெல்லாம்.. சரி!..

    அனாவசியமாக பல் டாக்டர் பரமேஸ்வரியிடம் எதற்குச் சென்றார்?..

    இவளைப் பற்றி அவளிடமோ
    அவளைப் பற்றி இவளிடமோ..

    போட்டுக் கொடுத்தால் போகின்றது!?..

    பிடுங்கி எடுத்து கையில் கொடுத்து விடுவாளுங்களே!?..

    எல்லாம் காலக்கொடுமையடா - கண்ணாயிரம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஏற்கனவே பல்ராமனுக்கு அனுபவம் இருந்திருக்கும் மறுபடியும் வேண்டாமேனு நினைச்சிருக்கலாம்.

      நீக்கு
  7. நீங்க எதையோ இந்த சமூகத்துக்கு சொல்ல, கொல்ல, மெல்ல நினைக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அடுத்து என்ன என்பதுதான் தெரியவில்லை.
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்களும் ஏதோ சொல்ல வந்துட்டீங்க....

      நீக்கு
  8. இறுக்கமான மனோநிலையில் இருந்தேன். புன்னகைக்க வைத்து விட்டது உங்கள் எழுத்து. நன்றி. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது எழுத்து தங்களது மனநிலையை மாற்றியது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  9. இப்படி பதிவுகள் எழுதி நீங்கள் எங்களை ‘வெல்லத்தான்
    நினைக்கிறீர்கள்’ போலும்.பதிவை இரசித்தேன். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹாஹாஹா அடுத்த பதிவின் தலைப்பை இப்படிப் போட்டு உடைச்சிட்டீங்களே.... நண்பரே...

      நீக்கு
  10. ரெண்டே ரெண்டுதானா....ஹஹஹ்ஹ்
    சொல்ல நினைத்து, கொல்ல நினைத்து, மெல்ல முடியாமல் மென்றுவிட்டீர்கள்......வார்த்தைகள் பொருந்துகின்றன...ஜி...அடுத்து "என்னதான்" நடக்கும் நடக்கட்டுமே...

    பதிலளிநீக்கு
  11. சொல்லத்தான் மெல்லத்தான் ஆனது
    பிரமாதம்
    ருசித்தோம்

    பதிலளிநீக்கு
  12. சொல்லத்தான்...கொல்லத்தான்...மெல்லத்தான் சூப்பர்..அடுத்து...??

    பதிலளிநீக்கு
  13. "அதனைத் துறந்தால் வழி பிறக்கும்" - சந்தத்தில் நிற்கவில்லை. அதனைத் தூர எறிந்தால் வழி பிறக்கும் என்று மாற்றுங்கள். "கறியை வேகவைத்தால் சுவையாகும்" - "கறியை வாட்டினால் சுவையாகும் மனையாளிடம் சொன்னால் நலமாகும்" - ஏது குறைகளே கண்ணில் படுகிறது.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு