தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 07, 2017

கவுண்டர்க்காரி


ஒருமுறை அபுதாபி மாலில் குளியல் சோப் நான்கு வாங்கினேன் அதன் விலை பத்து திர்ஹாம்ஸ் கவுண்டரில் பணம் கொடுப்பதற்காக வரிசையில் நிற்க எனக்கு முன்னாலிருந்த பெண் பொருட்களை மிஷினில் வைத்துக் கொண்டு இருந்தாள் கவுண்டரில் வழக்கம்போல பிலிப்பைனி பெண் கூடவே சூப்பர்வைசர் பெண்ணும் கவுண்டரில் இருந்தவள் என்னை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தாள் பல இடங்களிலும் இதுதானே நடக்கிறது இறைவன் தெரியாத்தனமாக என்னை அழகாக படைத்து விட்டதே காரணம் வேறன்ன செய்வது எனக்கும் இது பழகி விட்டது பொதுவாக பிலிப்பைனிகள் பேசுவதை யாருமே கவனிக்க மாட்டார்கள் காரணம் பேச்சின் தொணி நம்மூரில் குறத்திகள் பேசுவார்களே அதைப்போலவே இருக்கும் அவர்கள் கூடினால் பேஸிக்கே இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் நான் ஒட்டுக் கேட்பேன். அப்பத்தானே பதிவு போடமுடியும் இவள் சொன்னாள் சூப்பர்வைசரிடம்...

பயான் பிகோத்தி நக்கீதா மல்லாக்கி மைரோன்.
இவன் மீசையைப்பார் பெரிசா இருக்கு
சூப்பர்வைசரும் சிரித்துக் கொண்டே...
பாகெட் கட்டொலெட் நிடோ ?
ஏன் இந்த மாதிரி ?
பயான் அஷாவாங் பபாய் சலித்தா குஸ்தகோ...
இவன் மனைவி வேணும்னு.... சொல்லியிருப்பாள்.
இவள் சிரிக்க... எனது நேரம் வந்தது சோப்பை மிஷினில் செக் செய்தவள்
குட் ஈவ்னிங் சார்.
குட் ஈவ்னிங் ட்டூ யூ.
டென் திர்ஹாம்ஸ் ப்ளீஸ்.

நான் நூறு திர்ஹாம்ஸ் எடுத்துக் கொடுக்க, பாக்கி தொண்ணூறு திர்ஹாம்ஸுக்கு, இரண்டு இருபது திர்ஹாம்ஸும், மூன்று பத்து திர்ஹம்ஸும், நான்கு ஐந்து திர்ஹாம்ஸும் கொடுக்க, நான் வாங்கி அவளுக்கும் கேட்கும்படி எண்ணினேன் இப்படி.

டலவாம்போ இருபது
அபாட்னபோ நாற்பது
லிமாங்போ ஐம்பது
அனினபோ அறுபது
பிதோம்போ எழுபது
பிதோம்போத் லிமா எழுபத்து ஐந்து
வாலோம்போ எண்பது
வாலோம்போத் லிமா எண்பத்து ஐந்து
ஷ்யாம்னபோ தொண்ணூறு
பணத்தை பர்ஸில் வைக்கும்போது கவனித்தேன் மிரண்டு போய்...

நாக்ஸிஸிஸி
ஸாரி
ஓலா ப்ராப்லமா
பிரச்சனை இல்லை
சலாமத்
நன்றி
ஓலாங்கனுமான்
பரவாயில்லை

நகரும்போது எதிர்ப்புறமுள்ள கண்ணாடியில் கவனித்தேன் இரண்டு பிலிப்பைனிகளும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இதை எதற்காக பதிவு செய்தேன் தெரியுமா ?
எங்கள் கழுத்தை அறுக்கத்தான்
இல்லை நண்பா அதன் பிறகு நான் அங்கு போனால் அவளது கவுண்டருக்கே போவேன்
அதான் தெரியுமே...
இதில் பழக்கம் தொற்றிக் கொண்டது
எழுதிய விதி இப்படித்தான்

மற்றொரு தருணத்தில் நானும் எனது பிலிப்பைனி நண்பனும் பிலிப்பைன்ஸ் தூதரகம் சென்றோம் அவனது குழந்தையின் பாஸ்போர்ட்டில் ஒரு பிரச்சனை. அதை சரி செய்வதற்காக நான் பொழுது போகாமல் சும்மா உதவிக்காகத்தான் எனது காரை எடுத்துக் கொண்டு போனோம் அங்கு பிரச்சனை தலைதூக்க நான் கவுண்டர்க்காரிக்கு போன் செய்தேன் அடுத்த பத்து நிமிடத்தில் உள்ளிருந்து ஒரு பெரியவர் வந்தார்
ஹூஸ் இஸ் ஹியர் மிஸ்டர் கில்லர்ஜி
யெஸ் ஸார்
எங்களிடமிருந்து பாஸ்போர்ட்டையும் பேப்பர்களையும் பெற்றுக்கொண்டு உள்ளே போனவர் அடுத்த கால்மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு பாஸ்போர்ட்டுடன் வந்தார் சித்தப்பாவுக்கு நன்றி சொல்லி விட்டு வெளியேறினேன் அவர்தான் கவுண்டர்காரியின் தாய்மாமன் அன்று அவள் எனது மீசையை கிண்டல் செய்ததற்கு கண்டு கொள்ளாமல் வந்திருந்தாலோ, இல்லை அவளுடன் சண்டையிட்டு வந்திருந்தாலோ, இன்று இந்த வேலை முடிந்து இருக்குமா... கோபம் வந்து பயன் என்ன... ஏதோ கொழுந்தியாள்தானே என்று நான் விட்டுக் கொடுத்து வந்ததால் லாபம்தானே... பொருத்தவர் பூமி ஆள்வார் என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா... ?

// மற்றவரைத்தாக்கி வீழ்த்துகிறவன் வீரனல்ல கோபம்
வரும் சமயம் அதை அடக்கி கொள்பவனே வீரனாவான் //
எங்கோ எப்பொழுதோ சுவற்றில் எழுதியிருந்து நான் படித்த வாசகம் என் மனக்கண்ணில் வந்து போனது 

CHIVAS REGAL சிவசம்போ-
இதே ஆம்பளை ஒருத்தன் மீசையை இழுத்துப் பார்த்திருந்தால் ?
சாம்பசிவம்-
இழுத்தவன் கையில கோடரி வெட்டுதான்.

59 கருத்துகள்:

  1. அருமை... அகிம்சை தான் சிறந்த வீரம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  2. வாசகங்கள் சில இடங்களில் மாறி வருகின்றன. வழக்கம்போல் எனக்குத் தானா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கணினியில் சரியாக இருந்தது நீங்கள் சொன்ன பிறகு செல்லில் பார்த்தேன் இப்பொழுது சரி செய்து விட்டேன் என்று நினைக்கிறேன் கவனித்து சொல்லவும்.

      நீக்கு
    2. இப்போச் சரியா இருக்கு! நல்லா மூக்கை உடைச்சீங்க அந்தப் பெண்மணிகளுக்கு! :)

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  3. பிலிப்பினோஸ் பேசுவதைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது சிரிப்பு வந்தது. அவங்க பேசும்போது தொடர்ந்து வித்தியாசமாகப் பேசுவார்கள்.

    அவங்க ரீடெய்லயும் (எந்த விற்பனைக் கடைகள்லயும்) ஆஸ்பத்திரியிலும் கஸ்டமர் கேர் செய்து பேசுவதில் வல்லவர்கள். அந்த ஊர் ஆண்களுக்கு அடர்த்தியான மீசை பெரும்பாலும் கிடையாது.

    எப்போதுமே friendlyயாகும் எடுத்துக்கொண்டால் எல்லோரும் நண்பர்களாகிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களைப் போல் மீசை (பிகோத்தி) வைத்துக்கொள்வதில்லை அவர்களைப்பற்றி தெளிவாக தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள் நன்றி

      நீக்கு
  4. சுவாரஸ்யமான சம்பவம்.

    பதிலளிநீக்கு
  5. எப்படியோ பிலிப்பைங்காரியை கொழுந்தியாள் ஆக்கிவிட்டீர்கள்! அது சரி..."அவர்தான் சித்தப்பாவுக்கு கவுண்டர்காரியின் தாய்மாமன்" என்பதுதான் புரியவில்லை...என்ன உறவு இது??!!!ஜி?

    கோபம் வீரத்தின் அழகல்ல...கோபத்தில் பஞ்ச் டயலாக் பேசுவதும் வீரமல்ல! டிப்ளமாட்டிக்காக, கோபமில்லாமல் சில இடங்களில் நாம் இருந்துவிட்டால் நம்மைக் கிண்டல் செய்தவர்கள் கூட நமக்கு நண்பர்கள் ஆகிவிடுவார்கள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக காந்திஜிகூட இதைத்தான் சொல்லிக் கொடுத்துள்ளார் தங்களது கருத்துரைக்கு நன்றி

      பிலிப்பைனிக்கு தாய்மாமன் என்றால் எனக்கு சித்தப்பாதானே...?
      மறுபடியும் உறவுமுறை பதிவு போட்டு விடுவேன் ஜாக்கிரதை.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கீதா:)...
      கில்லர்ஜியின் கொழுந்தியாளின் கொழுந்தனாரின் மகனின் தாத்தா.. கில்லர்ஜிக்கு என்ன முறை?:)

      நீக்கு
    3. மகனின் தாத்தா முறை என்பதால் கில்லர்ஜிக்கு மாமா முறையாகும்.

      அய்யா என்று கேட்டிருந்தால் சித்தப்பா அல்லது பெரியப்பா என்று சொல்லி இருப்பேன்.

      அப்பா வழி, அம்மா வழி இரண்டையுமே சிலர் தாத்தா என்கின்றனர் இது தவறாகும்.

      நீக்கு
    4. அட போங்க அதிரா! கில்லர்ஜி! இந்த உறவு முறை எல்லாம் குயம்புது! ஹிஹிஹிஹிஹி அதுவும் கில்லர்ஜி அந்த சொற்றொடரில்தான் ஏதோ பிரச்சனை என்று தெரிகிறது....ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    5. கேட்ட கேள்விக்கு சரியான விடையும்,அறியாதவர்களுக்கு விளக்கமும் கொடுத்து விட்டேன்.

      நீக்கு
  6. சரிதான் ஜீ காரியம் பெரிசா வீரியம் பெரிசா அப்படினு ஊருக்குள்ள சொல்லுவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பா காரியம்தானே பெருசு.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. பரவாயில்லையே ,கொளுந்தியாள் போன் நம்பர் கூட கொடுத்து இருக்கிறாரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு பழகி விட்டால் பியூனின் நம்பர்கூட மேனேஜரிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வு எண்ணங்கள் இருக்காது.

      நீக்கு
  8. உண்மைதான் நண்பரே
    பொருத்தார் பூமியாள்வார்
    அருமை
    தம +1

    பதிலளிநீக்கு
  9. கில்லர்ஜியின் தலைப்புக்கு ஒரு பெரிய கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    பிலிப்பைன் காரப்பெண்ணை கொழுந்தியாள் ஆக்கிட்டீங்க என்பது அப்பெண்ணுக்குத் தெரியுமோ?:).. உண்மைதான் பெண்கள் கிண்டல்பண்ணியதால் உங்களுக்கு அது சந்தோசமாகவே இருந்திருக்குது:).

    இல்லை ஒரு ஆண் எனில்.. என்னாகியிருக்கும்?:)
    ............
    ...............
    .............
    ..........
    அப்பவும்... பாசை விளங்கவில்லை என்பதுபோல சிரிச்சிட்டே வந்திருப்பீங்க எனச் சொல்ல வந்தேன்:).. ஹா ஹா ஹா.

    நீங்க காசை எண்ணிய விதம் அழகு.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ இங்கு பெண்ணை யாரும் கிண்டல் செய்யவில்லை.
      அப்பாவி என்னைத்தான் அவர்கள் கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

      பாஷை விளங்கியதால் பழக்கம், பழக்கத்தால் கொழுந்தியாள்.

      நீக்கு
    2. கர்ர்ர்ர் உங்களுக்கு என் பாஷை புரியவில்லை, பெண்கள் உங்களைக் கிண்டல் செய்தார்கள் எனச் சொன்னேன்ன்:)

      நீக்கு
    3. மன்னிக்கவும் எனது புரிதல் தவறு என்பதை பிறகு புரிந்து கொண்டேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பது பிறருக்கு புரிந்தால் நல்லது.

      நீக்கு
  10. கில்லர்ஜி இன்று பழையபடி டமில்மனத்தில்:) 3ம் இடத்துக்கு வந்திட்டீங்களே.. ஹா ஹ ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வர வைத்த உள்ளங்களுக்கு நன்றி.
      இதை நம்ப இயலாது நாளையே ஐந்தாம் இடம் போகலாம் ???

      நீக்கு
    2. ஐயய்யே எனக்கு இதிலெல்லாம் ஆசை விருப்பம் இல்லை எனப் பொய்யாக நடிக்காமல் , உண்மையாகப் பதில் சொன்ன உங்கள் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு:)

      நீக்கு
    3. நன்றி எனக்கு வயிற்றில் இருப்பதே வாயில் வரும்.

      நீக்கு
  11. கொடுத்து வைத்த கொழுந்தியாள்..

    இருந்தாலும் -
    எல்லாராலும் கலாவுக்கு நாத்தனார் ஆகிட முடியுமா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையிலேயே எனக்கு கலா என்று ஒரு தங்கை முன்பு இருந்தது.

      சாதி பார்க்காமல் தோன்றிய உறவு இப்பொழுது சென்னையில் இருப்பதாக கேள்விப்பட்டேன் நலமுடன் வாழ அண்ணனின் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கலா அண்ணி படும் பாடு சொல்லி முடியாதூஊஊ:)

      நீக்கு
  12. முதலிடம் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்துக்கு ஜி அதைப்போயி பிடிச்சுக்கிட்டு...

      நீக்கு
    2. >>> என்னத்துக்கு ஜி.. அதைப்போயி பிடிச்சுக்கிட்டு!..<<<

      அதானே!..

      அமாவாசே?..

      உள்ளதைச் சொல்றேனு..ங்க!..

      நீக்கு
    3. வாங்க ஜி பதினாறு வயதுக்கு போயிட்டீங்களே... ஹா.. ஹா..

      நீக்கு
  13. நம்ம சின்னக் கவுண்டர் மாதிரி...பெரிய (மனசு) கவுண்டர் !?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கவுண்டர்க்காரி என்றதும் எம்மை (என்)கவுண்டர் ஆக்கி விட்டீர்களே...

      நீக்கு
  14. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அழகாக இருந்தால் எங்கேயும் எப்போதும் காரியம் சாதிக்கலாம் என்பது புரிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்கள் என்னை சொல்லவில்லையே...

      நீக்கு
  15. புது புது மொழிகளா பதிவு போட்டு எனக்கு தமிழே தகராறு இருந்தாலும் இரசிக்கும்படி உள்ளது த.ம வாக்குடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஓரளவு அறிந்த மொழிதான் பிலிப்பைன்ஸின் "தகாலன்" வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. அபுதாபி மாலில் இவ்வளவு நடந்திருக்கா... இங்க இருக்கும்போது சொல்லவேயில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல வேண்டிய தருணம் தற்போது வந்தது நண்பரே... எல்லா வகையிலும் கோபத்தை கிளப்புறாங்கே...

      நீக்கு
  17. தாங்கள் தங்கள் கொழுந்தியாளிடம் வைத்திருந்த பாசத்தையும்.தங்களின் கொழுந்தியாள் தங்களிடம் கொடுத்து வைத்திருந்த அன்பையும் தெரிந்து கொண்டேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை மிகச் சரியாக புழிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  18. மொழிஅறிவு நல்லதற்குதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  19. //மற்றவரை தாக்கி வீழ்த்துவது வீரமல்ல //மிக சரியா சொன்னீங்க . வாழ்க்கைன்னா இன்பமும் துன்பமும் எப்போ வேணும்னாலும் எந்த ரூபத்திலும் வரும் ,அதனால் எடுத்ததுக்கெல்லாம் கோபப்படாமல் பொறுமையுடன் இருப்பது நல்லது என்பதை உணர்த்தியது இச்சம்பவம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அந்த தத்துவம் நான் சொன்னதல்ல... ஒரு வேதத்தில் சொல்லப்பட்டது வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதை நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்கதளது வருகைக்கு நன்றி

      நீக்கு