தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், அக்டோபர் 12, 2017

வியக்கத்தகு வில்லியம்ஸ்

Williams Shakespeare

ஒரு சமயம் உலகே ஆச்சர்யப்பட்ட இங்கிலாந்து நாட்டு பேரறிஞர் ஷேக்ஸ்பியரை அந்தக் காலகட்டத்தில் உலக அழகி பட்டம் பெற்றவள் சந்தித்தாள் அப்பொழுது அவள் ஷேக்ஸ்பியரிடம்...

நீயோ உலகறிந்த அறிவாளி நானோ உலகில் சிறந்த அழகி. நீயும், நானும் திருமணம் செய்து கொண்டால் என்னைப்போல் அழகாகவும், உன்னைப்போல் அறிவாகவும், குழந்தை பிறக்கும் என்றாள்.

இந்தக் கேள்வியை, நம்மைப் போல் ஒரு மனிதனிடம் கேட்டிருந்தால் நாம் என்ன சொல்லி இருப்போம் ? ஆனால் ஷேக்ஸ்பியர் என்ன சொன்னார் தெரியுமா ?

உனது எண்ணம் போலில்லாமல், என்னைப்போல் அழகாவும், உன்னைப்போல் அறியாமையிலும், பிறந்தால் அந்தக் குழந்தையை என்ன செய்வது ? என்று கேட்டு மறுத்து விட்டார்.

ஆனால் இன்று மேக்கப்பின் உதவியால் ஒரு அழகான சினிமா நடிகை நாமிருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று சொன்னால் என்ன சொல்வார்கள் ? அவளின் வாழ்க்கையைப்பற்றி எந்த ஒரு சிந்தனை உணர்வுமின்றி மறு நிமிஷமே சம்மதம் சொல்லி விடுவார்கள்.

சாம்பசிவம்-
சிந்தனை எப்படியய்யா வரும் ? அன்னைக்கு உள்ள மனுஷன் சிந்திச்சு பதில் சொன்னான் காரணம் அவன் சோத்தை தின்னான், இன்னைக்கு அப்படியா ? பாக்டம்பாஸ் 20, 30, 40 அப்படின்னுல தின்னுக்கிட்டு இருக்கான்.

Chivas Regal சிவசம்போ-
அதுசரி ஷேக்ஸ்பியருமா சோத்தை தின்னாரு ?

41 கருத்துகள்:

  1. இதே உரையாடல் பெர்னாட்ஷா மற்றும் இசடோரா டங்கன் அப்புறம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட மெர்லின் மன்ரோ பேசின மாதிரியும் படித்திருக்கேன் ..
    ஷேக்ஸ்பியர் எங்க பக்கத்தூர்க்காரர்தான் :) அவர் அரிசி சாப்பிட்டாரா தெரியாது ஆனா கோதுமை சாப்பிட்டிருப்பார் இப்போ கோதுமைக்கு க்ளைபாசெட் போடறாங்க அவர் காலத்தில் நல்லதே சாப்பிட்டிருப்பார் ..பெர்னாட்ஷாவோ ஐன்ஸ்ட்டினோ ,இல்ல எந்த அறிஞர்களோ அக்காலத்தில் நல்லாவே யோசிச்சாங்க அதுக்கு காரணம் பூச்சிகொல்லியற்ற உணவு .
    அது சரி சாம்பசிவம் இப்படி புட்டு புட்டு வைக்கிறாரே அவருக்கு மட்டும் பாக்டம்பாஸ் என்டோசல்பான் quinalphos இல்லாத ஆர்கானிக் அரிசி கிடைக்குது போல :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அதிசயமாய் முதல் கருத்து சிறப்பு நன்றி
      இப்படித்தான் வரலாறுகள் முன்னுக்குப்பின் முரணாக திணிக்கப்படுகிறது
      நல்லவேளை இதே சம்பவத்தை எனது தாத்தா ஞானி ஸ்ரீபூவுவிடம், கிளியோ பாட்ரா கேட்டதாக வரலாறு ஜொள்"லவில்லை.

      உண்மை அன்று மனிதர் இயக்கையோடு ஒன்றி இயக்கை உணவு உண்டார்கள்.
      சாம்பசிவத்துக்கு உகாண்டாவிலிருந்து அரிசி இறக்குமதி ஆவதாக இரகசிய தகவல் வந்து இருக்கிறது.

      நீக்கு
    2. மன்னிக்க இயற்கை என்று படிக்கவும்.

      நீக்கு
    3. என் செக்கரட்டறிக்கு இம்புட்டு அறிவோ என நான் வியக்கேன்:)...
      சாம்பசிவம் அங்கிளுக்கும் சிவாஸ் ரீகல் சிவசம்போவுக்கும் சோத்து நினைப்பேதான் போல கர்ர்ர்ர்:)

      நீக்கு
    4. ஆமா....சாப்பாட்டு இராமன்களாகத்தான் இருப்பாங்களோ....

      நீக்கு
  2. இது பெர்னார்ட்ஷாவிடம் கேட்ட கேள்வி. பெர்னார்ட்ஷாவிடம் கிரிக்கெட் பற்றியும் கேள்வி கேட்டு பதில்வாங்கியிருக்காங்க (11 முட்டாள்கள் விளையாடறதை 11,000 முட்டாள்கள் பார்க்கிறாங்க something like that). யார் சொன்னா என்ன... கருத்து நல்லாத்தான் இருக்கு.

    சரி...கில்லர்ஜி... மெயின்டெய்ன் பண்ண பணம் இல்லாமல் எல்லோரும் தலையாட்டிவிடமுடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கிரிக்கெட் கேள்வி விடயம் பெர்னாட்ஷாவிடம் என்பது எனக்கு புதிய தகவல் நன்றி.

      டைம்பாஸ் ஆசை 60 நாள் பிறகு விவாகரத்துதானே...

      நீக்கு
  3. நிஜமோ, கற்பனையோ நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நம்மூரில் நம்பி கல்யாணம் பண்ணலாம்.சீக்கிரமே விவாகரத்தாகிவிடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி இதுதான் என் கருத்தும் விவாகரத்து உறுதியே...

      நீக்கு
  4. பெர்னாட்ஷா என்று கேள்விப் பட்டேன். நெ.த.வும் அதே சொல்லி இருக்கார். அரிசி இங்கே நல்லாவே இருக்கு! சென்னையில் இருந்தப்போ இப்படி அரிசி கிடைக்கலை! இங்கே அரிசி, தண்ணீர், காற்று மூன்றும் அருமை! அடுத்துக் காய்கள். நாட்டுக்காய்கறிகள்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ எல்லோரும் பெர்னாட்ஷாவையே சொல்வதால் அதுதான் உண்மையாக இருக்கும்
      நான் உகாண்டா மொழி நூலில் படித்ததால் அவசரத்தில் தவறு ஏற்பட்டு இருக்கலாம்.

      உங்க ஊரில் நல்ல அரிசி சரி அது ப்ளாஷ்டிக் அரிசி இல்லை என்றால் மகிழ்ச்சி.
      நல்ல காற்று என்பதை வெளியில் சொல்லாதீர்கள் இப்பொழுது பாக்கெட் காற்று விற்பனைக்கு வந்து விட்டது.
      பிறகு எல்லா கம்பெனிக்காரனும் திருச்சி வந்து பிடிச்சுட்டு போயிருவாங்கே...

      நீக்கு
  5. நீங்கள் சொன்ன, ஷேக்ஸ்பியர் பதிலை முன்னரே படித்துள்ளேன். தற்போது மறுபடியும் உங்கள் பதிவு மூலமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நன்றி இதை சொன்னது அறிஞர் ஷேக்ஸ்ஃபியர்தானே ?

      நீக்கு
    2. சொன்னது ஷேக்ஸ்பியர் அல்ல வேறொருவர் என்றும் படித்த நினைவு. கீதா சாம்பசிவம் அவர்கள் கூறுவது பெர்னாட்ஷாவாக இருக்கக்கூட வாய்ப்புண்டு.

      நீக்கு
    3. முனைவர் அவர்களின் தேடுதலுக்கு நன்றி.

      நீக்கு
  6. முன்னரே படித்த நினைவு! த ம 9

    பதிலளிநீக்கு
  7. இந்த அழகி, அறிவாளி கதைய எத்தனை பேருக்குதான் சொல்வீக?! மிடிலப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி.. ஹி.. ஹி.... உங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டேன்.

      நீக்கு
    2. தினத்தந்தி இளைஞர் மலர், சிறுவர் மலர்ல மாசத்துக்கு ரெண்டு வாட்டி போடுவாக

      நீக்கு
    3. வாங்க நீங்க சிறுவர் மலர் படிக்கிறவங்களாளாளாளாளா....?

      நீக்கு
  8. இப்படித்தான் விடலப் பய ஒருத்தனை -
    மோகினி வந்து ஆசையா கூப்பிட்டிருக்கா..

    நடுச் சாம நேரமா!.. பயலுக்கு சந்தேகம்..
    கீழ குனிஞ்சு பார்த்திருக்காங்..காலு இருக்கா..ன்னு!..

    இல்லே..ல்லா!..

    ஈரக்குலை அந்து போச்சு..
    அத்தோட தென்னை மரத்தில ஏறி தாவியிருக்காங்..

    அந்தாக்கில பாவம் - காலைல கண்டு எடுத்தாங்க...

    என்ன பண்றது மோகினி அடிச்சிட்டா..ன்னு
    ஆசைப்பட்ட மோகினி தலைல பழியத் தூக்கிப் போட்டுட்டானுங்க.. ஊர்க்காரப் பயலுவ..

    ஆனா - நடந்தது என்னா..ன்னா -
    அவந் தேங்கா களவாட வந்த பய!..
    வசமா மாட்டிக்கிட்டாங்.. மட்டையடி மண்டகப்படி..
    மோகினி கிட்டயே போய்ச் சேர்ந்துட்டாங்..

    பதிலளிநீக்கு
  9. ஒரு பொண்ணோட மனசை உடைச்சி இருக்கார் பாருங்க அப்பவே இதெல்லாம் கண்டித்தக்கது ஆமாம்
    பெருளாதாரம் தெரிந்தவர்களாக இருக்கலாம் மேக்கப் இவ்வளவு செலவா அப்ப நிறைய பணமிருக்கு என்ற நல்ல எண்ணம்தான்
    எதை தின்னாலும் ஏமாறுதனமில்லாதை தின்னு இருப்பாங்க சலிப்பில்லாமல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இவ்வளவு காலத்துக்குப் பிறகு யாரை கண்டிக்கிறது ?

      நீக்கு
  10. திரு நெல்லைத்தமிழன் அவர்களும் ,திருமதி கீதா சாம்பசிவம் அவர்களும் சொன்னதுபோல, இந்த கேள்வி திரு பெர்னாட்ஷா அவர்களிடம் கேட்கப்பட்டதாகத்தான் நானும் படித்திருக்கிறேன். எப்படியிருப்பினும் அந்த கேள்விக்கு சரியான பதிலைத்தான் தந்திருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  11. கேள்வியும், பதிலும் அருமை.
    முன்பே படித்து இருந்தாலும் உங்கள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  12. ஆக...வில்லியம்ஸ்சு அப்பவே..சோத்த சாப்பிட்டதால் அம்புட்டு அறிவு பெற்றாரு.....புழுத்து போன ரேசன் அரிசிய சாப்பிட்டும் நம்மாளுகளுக்கு அறிவே என்பதே இல்லாமே போச்சு நண்பரே..

    பதிலளிநீக்கு
  13. இந்த காலம் என்றால் மகளிர் அமைப்புகள் ஷேக்ஸ்பியருக்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்கலாம். நல்ல வேளை தப்பித்தாரு த.ம. வுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. இந்த கோணமும் சிந்திக்க வேண்டியதுதான் நண்பரே.

      நீக்கு
  14. நல்ல காலம் உங்களிடம் எந்த அழகியும் அப்படி கேட்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எனக்கு அந்த அதிர்ஷ்டம் எப்பவுமே கிடையாது.

      நீக்கு
  15. அழகா? அறிவா? என்ற பட்டிமன்ற தலைப்புக்கு அடிப்படையான சிந்தனை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதுவும் நடத்தலாம்தான்.

      நீக்கு
  16. அது அந்தக்காலம் இப்போது நடிகை ரெடி சொன்ன உடனேயே ஓடிப்போக பலர் தயாராக இருப்பது இக்காலம் நவீன யுகம் ஜீ)))) .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. தனிமரத்தை தோப்பாக்கி விடலாமோ ?

      நீக்கு