தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், அக்டோபர் 05, 2017

இது பெரியார் சொன்னது அல்ல !

மேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது

ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இவரு கவர்னரா ? இல்லை கட்சித்தலைவரா ? இல்லை ஏதாவது தொகுதி சட்டமன்ற உறுப்பினரா ? ஒண்ணுமே புரியலையே... சும்மாவா நம்ம தாத்தன் பாட்டன் சொல்லி வச்சாங்க.... கேனப்பயல்க ஊருல கிறுக்குப்பய நாட்டாமைன்னு.. இப்படி சொன்னது கில்லர்ஜி’’னு நினைக்காதீங்கோ... ஊருக்குள்ளே நாலுபேரு நாலு விதமா பேசிக்கிட்டாய்ங்கே...
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

தினம் சாயங்காலம் ஆயிட்டா... இந்த ஊடககாரங்கே பத்து வெத்து வேட்டுகளை கூட்டி வச்சுக்கிட்டு நாட்டை இவங்கேதான் திருத்தப்போறது மாதிரி இலவு வீட்ல சண்டை போட்டது போல போடுறாங்களே... இதனால எந்த அரசியல்வாதி திருந்தப் போறாய்ங்க எல்லாப்பயலும் திருடன்னு தெரிஞ்சும் மக்கள் ஓட்டுப் போடுவதற்கு தயாராகத்தான் இருக்காங்க என்ன செய்யிறது ? எல்லாம் கலிகாலம். இப்படி புலம்புவது கில்லர்ஜி இல்லை தெருவுக்குள்ளே ரெண்டு பெருசுங்க புலம்பிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 02 * * * * * * * * * *

ல்லக்கைகள் நாலுபேரு பக்கத்தில் இருந்ததால... நீதி கேட்டு நெடும்பயணம்னு சொன்னவருக்கு நிதித்துறையை கொடுத்ததால இப்ப ஆத்தா சாவுல மர்மம் இல்லைனு ஆயிடுச்சு போலயே.. அவரு வாயை மூடிட்டாரே... எல்லாம் நாற்காலி ஆசை வேறென்ன ? காலக்கொடுமையய்யா காலமேகப்புலவரய்யான்னு ஆயிடுச்சு இப்படி பேசுனது கில்லர்ஜி கிடையாது கார்மேகம் டீக்கடையில பேசிக்கிட்டாய்ங்கே...
* * * * * * * * * * 03 * * * * * * * * * *

மிழ்நாடு முழுக்க எல்லாக் கட்சிக்காரனும் அனிதா, அனிதான்னு பேசுறாய்ங்கே... அன்புமகள்’’னு சொல்றாங்கே... எல்லாம் ஓட்டுக்காகத்தானே.... அடுத்து ஒரு வினிதா செத்துடக் கூடாதுன்னு யாராவது அதற்கான வேலையை செய்யிறாய்ங்களா ? உங்களைச் சொல்லி குற்றமில்லை மக்கள் இன்னும் மாக்களாக இருக்கும்வரை உங்க வீட்ல பணமழைதான் இப்படிச் சொன்னது கில்லர்ஜி இல்லை முனீஸ்வரர் கோயில் முச்சந்தியில மூணு பேரு பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 04 * * * * * * * * * *

சும்மா சொல்லக்கூடாது இரும்பு மனுஷின்னு சொன்னது சரிதான் போல... ஆத்தா சாகவும் ஆளாளுக்கு வாய் பேசுறாய்ங்களே.... ஸிஸ்டம் சரியில்லையாம் இவ்வளவு நாளா புடுங்கவா போனாரு ? என்னமோ போர் வருதாம் இவங்களோட அக்கப்போரும் ஆரம்பமாகப் போகுதோ... ச்சே அன்னைக்கே குண்டடிபட்டு செத்து இருக்கலாம். இப்படி அலட்டிக் கொண்டது கில்லர்ஜி இல்லை சுப்பையா சந்துல இருக்கிற சுதந்திரப் போராட்ட தியாகி மோகனசுந்தரம் பிள்ளை சொல்லிக்கிட்டு இருந்தாரு...
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

ன்னமோ அசிங்கமா பாடிட்டான் பீப், மட்டன் அப்படி இப்படினு மாதர் சங்கம் எல்லாம் கொடி பிடிச்சாங்க இதோ அவனோட படத்துக்கு தியேட்டருல கூட்டத்தை பார்த்தியா ? எல்லாம் பொம்பளைப் புள்ளைங்கதான் இந்த நாடு திருந்தும்னு நினைக்கிறே.... ? சுனாமி வரணும் அப்படியாவது கூமுட்டை ஜனங்கள் குறையணும் நாட்டுல கோடிக்கணக்குல முட்டாள் ஜனங்கள் இருக்கிறதைவிட நூற்றுக்கணக்குல அறிவாளிங்க இருந்தால் போதும் மோடி இல்லாமல் நாட்டை ஆளலாம் இப்படி சலிச்சுக்கிட்டது கில்லர்ஜி இல்லைங்கோ.... சமூக ஆர்வலர்கள் இரண்டு பேரு பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 06 * * * * * * * * * *

ன்ன ஸார் நம்ம பணத்தை பேங்க்ல போட்டு வைக்கிறதுக்கு இப்படி மணிக்கணக்கா வரிசையில நிற்க வேண்டியது இருக்கு ? என்ன ஸார் இதுக்கே இப்படி சலிச்சுக்கிறீங்க ? தேர்தல்ல நின்னு லட்சங்கள் செலவு செய்து எம்எல்ஏவாகி கோடிக்கணக்குல சம்பாரிச்சு ஆடம்பரமாக வாழப்போறான்னு நமக்கு கண்கூடாகவே தெரியுது அப்படி இருந்தும் நாம் நமது கடமை, வாக்குரிமை, மண்ணாங்கட்டின்னு சொல்லிக்கிட்டு வெயில்ல நின்னு காத்திருந்து ஓட்டுப்போட்டு அவனை சட்டமன்றத்துக்கு அனுப்பி வச்சுட்டு அஞ்சு வருசத்துக்கு மறந்துடுறோம் இதுல நம்மலோட பணத்தை பாதுகாப்பாக பேங்க்ல போடுறதுக்கு பொறுக்க மாட்றீங்க ? இப்படி சொன்னது கில்லர்ஜி இல்லை அம்போ ஓவர்லோடு பேங்க்ல பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 07 * * * * * * * * * *

ண்டி பரிமளா நம்ம மோடி டிஜிடல் இந்தியான்னு சுகாதாரமாக ஆக்கப்போறாராமே... எப்படி ? ஆமாக்கா எம்புருஷனும் சொன்னாரு நம்ம குப்பைகளை வீட்டு மச்சுக்குள்ளே மக்கு குப்பை, மக்கா குப்பைனு ரெண்டு பிரிவா சேகரிச்சு மறுவருஷம் முனுஷிபாலிட்டியில கொடுத்தா நம்மலோட ஸ்விஸ் அக்கவுண்ட்டுல எடைக்கு எடை ஸ்வீட் போட்டு வப்பாகலாம். அப்படியா.... நானும் புருஷன்ட்ட சொல்லி லோன் போட்டு மச்சுல ரூம் போடச் சொல்லணும். இப்படி நான் சொல்லலைங்கோ... பக்கத்து வீட்டு பரிமளாவும், அடுத்த வீட்டு அகிலாவும் அவங்க ரெண்டுபேர் வீட்டுக்கும் இடையில் வீடு கட்டாமல் காலியாக கிடக்கும் கில்லர்ஜியின் இடத்தில் குப்பைகளை கொட்டி விட்டு பொறணி பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 08 * * * * * * * * * *

லைவன் வர்றான்னு தெருவுல மக்கள் நடக்க முடியாத அளவுக்கு ப்ளக்ஸ் போர்டு வக்கிறாங்கே.... தலைவன் செத்துட்டாலும் வைக்கிறாங்கே... கல்யாணத்துக்கு நண்பனை வாழ்த்தி வைக்கிறாங்கே... கோவில் திருவிழான்னு வைக்கிறாங்கே... பாட்டி செத்ததுக்குமாடா எதற்குத்தான் பகட்டு வாழ்க்கை வாழுறதுன்னு இப்ப உள்ளவங்களுக்கு தெரியலையே... ரெண்டாம்நாள் பார்த்தால் அந்த ப்ளக்ஸ் போர்டு புறம்போக்குல வீடு இல்லாதவன் கக்கூஸ் மறைவுக்கு வச்சு அதுமேல ஒண்ணுக்கு அடிக்கிறான் என்னாங்கடா உங்களோட மரியாதை ? இப்படி வருந்தியது நானில்லை சமூக அக்கரையுள்ள கில்லர்ஜி மாதிரி ஒருத்தன்னு வச்சுக்கங்களேன்...
* * * * * * * * * * 09 * * * * * * * * * *

சிரியர்கள் நியாயம் கேட்டு போராட்டம் நடத்தியதால் அன்றைய தினம் சம்பளம் கிடையாது என்று சொல்ற அரசு சட்டமன்ற உறுப்பினராகி மூன்றரை வருடமாகியும் சட்டமன்றம் செல்லாத தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மட்டும் சம்பளம் சரியாக போய்க்கிட்டு இருக்கே இது நியாயமா ? இதைப்போல விடுமுறை எடுத்த எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பளம் பிடிக்க அரசுக்கு திராணி இருக்கா ? அப்படினு கில்லர்ஜி கேட்கலை. போராட்டத்தில் ஈடுபட்டவங்க பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 10 * * * * * * * * * *


சிவாதாமஸ்அலி-
அப்படீனாக்கா... மேலே எழுதியதெல்லாம் சுயபுத்தி இல்லையா ? அடுத்தவங்க பேசும்பொழுது ஒட்டுக்கேட்டதா ?
சாம்பசிவம்-
எல்லாம் காரணமாகத்தான் பிரச்சனை வரும்பொழுது துளசிதரன் மாதிரியான ஆசிரியர்கள் பேசிக்கிட்டதுனு சொல்லி தப்பிச்சுக்கிறலாம்ல...
Chivas Regal சிவசம்போ-
பழம் விழுந்தால் தேவகோட்டை, கொட்டை விழுந்தால் பாலக்காடு.

 காணொளி

45 கருத்துகள்:

 1. வரவர நியாயமான கேள்விகள் அதிகமாகிவிட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே மனதில் தேங்கி கிடப்பவைகளை என்ன செய்வது ?

   நீக்கு
 2. அத்தனையும் அக்மார்க் உண்மைகள் !!!

  Shankar

  பதிலளிநீக்கு
 3. ஹாஹாஹா, இன்னிக்கு மாட்டிக்கிட்டவர் துளசிதரனா? நல்லா இருக்கு. எல்லாம் நல்ல கேள்விகளே! பதில் யார் கொடுக்கப் போறாங்கனு பார்ப்போம். நமக்கு வேடிக்கை பார்க்கத் தான் தெரியும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இப்படித்தான் சந்தோஷமாக இருப்பவர்களை கோர்த்து விடுவதா ?

   நீக்கு
 4. வரவர..அநியாயம் பெருகிட்டே போய்கிட்டு இருக்கு.அதற்கு ஏற்றாற்போல்.தட்டிக் கேட்கும் கூட்டமும் குறைஞ்சிகிட்டே போகுது...நண்பரே..

  பதிலளிநீக்கு
 5. அந்த நாலுபேருக்கு நன்றி...கில்லர்ஜிக்கும்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பொறணி பேசியவர்களுக்குத்தானே....

   நீக்கு
 6. >>> பழம் விழுந்தால் தேவகோட்டை..
  கொட்டை விழுந்தால் பாலக்காடு!..<<<

  பாலக்காட்டில் கொட்டை விழுந்து அங்கேயாவது முளைக்கட்டும்..
  தமிழ் நாட்டில முளைச்சு மரமானா வெட்டிடுவாய்ங்கே!..

  அட.. மக்கா!.. கொட்டையில்லாத பழம் ஏது...ங்கறேன்..
  கில்லர் ஜி.. கனா கினா கண்டுட்டு புலம்புறாரோ!..

  இது நான் சொல்லலைங்கோ..
  நடுச்சாம கோடங்கி ரெண்டு பேரு பேசிக்கிட்டதுங்கோ!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   கேரளத்திலாவது விழட்டும் உண்மைதான்.
   கடைசியில் நீங்களும் ஒட்டுக் கேட்டதுதானா....

   நீக்கு
  2. துரை சகோ! சரியா சொன்னீங்க பாலக்காட்டுல முளைச்சா மரம்..வனம்...இந்த தமிழ்நாட்டுல முளைச்சா வெட்டி பாலைவனம்...நல்லா சொன்னீங்க. நடுச் சாம கோடங்கிகள் கோணங்கி இல்லைனு தெரியுது!! செம...

   கீதா

   நீக்கு
  3. ஆட்சியைக் கலைச்சு வீட்டுக்கு அனுப்ப என்ன கவர்னரா இருக்கணுமாஅ என்ன கில்லர்ஜி கோடறிய தூக்கிட்டு சீறி எழுந்து கூட்டத்த திரட்டினா பண்ணிற முடியாதா என்ன...இது சிவதாமஸ் அலி ஊருக்குள்ள புகையவிட்டது....

   சரி சாம்பசிவம்....இன்னுமா கலைஞருக்குச் சம்பளம் போகுது??!!! எனக்கென்னமோ டவுட்டா இருக்கே இதுல...கொஞ்சம் கேட்டு சொல்லப்பு...

   இது சிவாஸ் ரீகல் கேட்டது...

   சாம்பசிவம்: இவன் லொள்ளு தாங்கலைப்பா...இத அடிச்சுட்டான்னா இவன் என்னென்னவோ நியாயமா கேக்க ஆரம்பிச்சுடறான்...கில்லர்ஜிகிட்ட சொல்லி வைக்கணும் இந்தாளுக்கு ஒரு தட்டு தட்டி வைக்க..

   கீதா

   நீக்கு
  4. நான் கோடரி எடுக்கத்தயார் என் பின்னால் குரல் கொடுக்க யார் இருக்கா ?

   கலைஞருக்கு மட்டுமல்ல விடுமுறை எடுத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் போகுது.

   அந்த குடிகாரமட்டை சிவாஸ் ரீகலை யாரும் கேட்க முடியாது

   நீக்கு
 7. 'கேள்வியின் நாயகர்' என்கிற பட்டத்தை உங்களுக்குத் தரப் பிரியப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நானா கேட்டேன் என்னை மாட்டி விடாதீங்கோ... ஊருக்குள்ளே நாலு பேரு நாலு விதமா பேசிக்கிட்டாங்க...

   நீக்கு
 8. பழம் விழுந்தால் தேவகோட்டையோ.. எல்லாம் சாப்பிட்டு மிச்சமான பருப்பு மட்டும் பாலக்காட்டில விழுமோ கர்ர்:) .. துளசி அண்ணன் விடாதீங்க பொயிங்குங்கோ:).. இப்போ பொயிங்காட்டில் பின்பு எப்பவுமே பொயிங்கேலாதூஊஊஊ:))

  சிவசம்போ அங்குளுக்கு குசும்பு கூடிப்போச்ச்:) முதலில் அவரைத்தூக்கி உள்ளே போடோணும்..:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தால் கருத்து போடணும் இப்படி தெர்மோகோல் மூட்டி விடக்கூடாது.

   சிவசம்போவை கைது செய்தால் நாட்டுல தீ பத்திக்கிட்டு எரியும் இது தேவையா ?

   நீக்கு
  2. அதிரா மிக்க நன்றி!! எனக்காகப் போராடும் ஒரு நல்ல உள்ளம் இருக்குதுனு!!! தேம்ஸ்ல பொயிங்கலாமா இல்லை எங்க ஊரில் பெரிய நதியான பாரதப்புழாவில பொயிங்கலாமா??!! உங்களுக்குத் தேம்ஸ் போரடிச்சுருக்கும் அதனால் எங்க ஊருக்கு வந்துருங்க...பொயிங்குருவோம்!!! ஹ்ஹாஹ்ஹாஹாஹா...

   நீக்கு
  3. செல்லூர் ராஜூம், தெர்மோகோலும் இணைஞ்சுட்டீங்களே...

   நீக்கு
 9. ஹாஹாஹாஹாஹா கில்லர்ஜி எனக்கு ஆப்புனு சொல்லுறீங்க!! பரவால்ல....என்னை மாட்டிவிட்டாலும் ஈசியா தப்பிச்சுருவேனாக்கும்!! அந்த டெக்னிக் மட்டும் கேட்கக் கூடாது!..

  இருவரின் கருத்தும்: அனைத்துமே சரிதான்...கில்லர்ஜியே சொல்லிட்டு யாரோ சொன்னாங்கனு...ஹாஹாஹாஹா...எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல....ஹிஹிஹிஹி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... அந்த டெக்னிக்கை மட்டும் மின்னஞ்சலில் அனுப்புங்களேன் பதிவுல போடமாட்டேன். இது சிவசம்போ மேல சத்தியம்.

   நீக்கு
 10. கேள்விகளை-நியாயமான கேள்விகளை ஒட்டுக்கேட்கும் நாயகர்" - இந்தப் பட்டம் நல்லா இருக்கா?

  காணொளி நல்லா இருக்கு. கீழ ஒருவேளை சில்லரை தேடுறாங்களோ? நீங்கதான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கோடிக்கணக்கில் சம்பாரிப்பவர்கள் கீழே கிடக்கும் சில்லரையை தேடலாமா ?

   இப்படி நான் கேட்கவில்லை பதிவை படிப்பவர்கள் நினைப்பார்களே...

   நீக்கு
 11. இத்தனை கேள்விக்கான பதிலை பெரியார் தீர்க்கதரிசனமாய் அன்றைக்கே சொல்லிவிட்டாரே ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சரியான விடயத்துக்கு வந்துட்டீங்க...
   அந்தப்பதிலுக்கான படம்தான் மேலே இருக்கிறது வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 12. கில்லர்ஜி ஒரு கேள்விக்குறி?விடை தெரிய்ய்யயும்...ஆனா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா வடிவேல் மாதிரி இழுக்குறீங்களே...

   நீக்கு
 13. அருமையான கேள்விகள். ஊரில் நாலு பேர் நாலுவிதமாய் பேசாமல் நாட்டு நிலமையை பேசியது மகிழ்ச்சி.

  நல்ல பதில் நல்ல மனிதர் தர வேண்டும்.
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
 14. ஊர் நடப்பையெல்லாம் பேசி உங்கள் எல்லோரும் ரொம்ப கடுப்பேத்தறாங்கனு புரியுது எடுத்த எடுப்புல நாமலையும்(கேனப்பயஊருல ) சேர்த்து புடிங்க அத படிச்சவுடன் ஹான் !!தான் கடைசி தப்பித்தல் இருக்கே அதுதான் சூப்பர் நாம யாரு ........:-):-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா இதுல வேதனை என்ன தெரியுமா ? எவனுக்கும் ஓட்டுப்போடாத என்னையும் திட்டுறாங்க...

   நீக்கு
 15. நாட்டு நடப்பை நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் தாங்கள் (மக்கள்) எழுப்பியுள்ள கேள்விகள் மற்றும் ஐயங்களுக்கு பதில் பதில் தான் இல்லை.

  காணொளி அருமை.! அதை பார்க்கும்போது யாருக்கும் வெட்கமில்லை என்றே தெரிகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 16. கேள்விகளில் கோபம் கொப்பளிக்கின்றது ஜீ!

  பதிலளிநீக்கு
 17. இந்தப் பதிவு என் டாஷ் போர்டில் வரவில்லையே தேர்தலுக்கு நீர்பவர் எல்லோரும்வெற்றி பெருவதில்லை அரசியல் மோகத்தால் பணமிழப்பவர்களும் இருக்க வேண்டுமில்லையா அதெப்படி அத்தனை பேரின் பெயரும்கெடுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் தவறு செய்வதால் அப்படி தோன்றலாம் ஐயா வருகைக்கு நன்றி

   நீக்கு