தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 21, 2018

திருப்புவனம், திருவாளர். திலீப்முந்தைய பகுதியை படிக்க... Honey என்ற அனிதா

தினேஷுக்கு வேலையில் கவனம் சிதறியது...
இது நடந்தது கடந்த வருடமாக...
இன்று...
இதை இப்படியே தொடர விடுவது தவறு மாற்றுத்தீர்வு காணவேண்டும்.

ஹலோ அனி நான் திலீப் பேசுறேன்.
சொல்லுங்க திலீப்.
இல்லை நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதே, பலநாள் உங்கிட்ட சொல்லணும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்.
பரவாயில்லை சொல்லுங்க...
அது வந்து உன்னோட கணவரைப்பற்றி...
சொல்லுங்க...
அவரு உங்கிட்டே அன்பா நடந்துக்கிறாரா ?
முன்னாலே நல்லாத்தான் இருந்தாரு கொஞ்ச காலமா ஒரு மாதிரியாத்தான் பேசுறாரு, கோபப்படுறாரு, ஏன் திலீப்... ?
அதாவது அவரு அவரோட செக்ரட்டரி பிலிப்பைனி லேடியோட பலநேரம் காருல போறதை பார்த்திருக்கேன்.
வேலை விசயமாக போயிருப்பாங்க இதெல்லாம் சகஜம்தானே, இந்த நாட்டுலே...
இல்லை அனி அவரு, ஒரு தடவை என்னோட ஃப்ளாட் சாவியைக்கூட கேட்டாரு...
என்ன சொல்ல வர்றீங்க ?
ஆமா என்னோட அலுவலகத்துக்கே வந்து கேட்டாரு, கொடுத்துட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தேன் காருக்குள்ளே ஒரு பொண்ணு இருந்தாள்.
இருக்காது என்னோட கணவர் அப்படிப்பட்டவர் இல்லை ஒருவேளை அப்படிச் செய்தால் நீங்க எங்கிட்டே அப்பவே சொல்லியிருக்கலாமே, எனக்காக அவருக்கிட்டே எடுத்துச் சொல்லி தடுத்து இருக்கலாமே...
உண்மைதான் அனி உனக்குத்தெரிஞ்சா நீ வேதனைப்படுவேனுதான் அவருக்கிட்டே சொன்னேன், அதுக்கு....
அதுக்கு ?
அவரு நம்மளை சந்தேகப்படுறாரு...
என்ன சொல்றீங்க ?
ஆமா, அனி இது தவறு அப்படினு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் அதுக்கு அவரு சொல்றாரு நீங்களும், அனிதாவும் காலேஜிலிருந்தே பழகியிருக்கீங்க, உங்களுக்குள்ளேயும்தான் தொடர்பு இருக்கு நான் எப்படி... கண்டுக்கிறாமே இருக்கேன் அதைப்போலத்தான் அப்படினு சொல்றாரு...
இல்லை, இல்லை, என்னோட கணவர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டாரு..
அனி நீ வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறே... கொஞ்சம் நான் சொல்றதை ஆற அமர யோசிச்சு பாரும்மா... ப்ளீஸ்..
.........
அனி ஏதும் பேசமாட்றே... நான் ஒண்ணு சொன்னால், தப்பா எடுத்துக்க மாட்டியே ?
சொல்லுங்க ?
ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்னு சொல்லுவாங்க... அதுனாலே அவரு வழியிலேயே போயி...
அப்படினா ?
அதாவது அவரு சொன்னதுபோல...
சொன்னதுபோல...
நாமயேன்.... இருக்கக்கூ....டாது....
ச்சீ நிறுத்துடா, நீ இவ்வளவு கேலவமானவனா, இருப்பேனு நான் நினைக்கலே இப்பவும் சொல்றேன்டா எம் புருஷனைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும், ஒருவேளை அவரு அப்படி நடந்துக்கிட்டது உண்மையா இருந்தால் ? நான் தமிழச்சிடா அவரு தூங்கும்போது உயிரோட தீயை வச்சுக் கொளுத்திட்டு நானும் தற்கொலை பண்ணிக்கிருவேன், இனி ய்யேம் மூஞ்சியிலேயே முழிக்காதே வைடா போனை.

சொல்லி விட்டு டமார் என ரிசீவரை அடித்து வைத்தாள். டமார் சப்தம் காதில் வந்து அடிக்க ரிசீவரை தொங்கவிட்டு பப்ளிக் டெலிபோன் பூத்தை விட்டு வெளியே வந்த தினேஷ் சந்தோஷப்பட்டான் இனி திலீப் என்ற தொல்லையிலிருந்து ரிலீப் கிடைத்து விட்டது ‘’ச்சே’’ என் அனிதா நம்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றாள் அவளை நாம் தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே... இனி நம் அனிதாவை Honey என்றே செல்லமாக அழைக்க வேண்டும் தினேஷுக்கு மிமிக்ரியும் தெரியும் கடந்த ஒரு வருடமாக வந்து பேசிய திலீபின் குரலை மனப்பாடம் செய்து கொண்டு காரியத்தை வெற்றிகரமாக முடித்து விட்டான்.

பாவம் திலீப் நான்குநேரி ஜல்லிக்கட்டில் ஐந்தறிவு மாடு முட்டி வீட்டுக்குத் தெரியாமல் ஆறு மாதமாக, ஏழு பரம்பரை பழனி வைத்தியக் கோஷ்டிகளிடம் வந்து போயி வைத்தியம் பார்த்ததில் இனி இவனுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற காரணத்தால் எட்டு வருடமாக முறைப் பெண்ணுகளுக்கு எல்லாம் கல்யாணம் நடக்கட்டுமென ஊருக்கே போகாமல் ஒன்பது விசயத்தை மறைத்து காலத்தை ஓட்டி அம்மாவை சமாளித்துக் கொண்டு வருகிறான் என்பது மேலே இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறாரே பத்தாம் பசலி கடவுள் அவருக்கு மட்டுமே தெரியும்.

முற்றும்.

Chivas Regal சிவசம்போ-
யாரு மேலயும் தப்பு இல்லையே பின்னே ஏன்... எல்லோரையும் கெட்டவனா சித்தரிச்சு குழப்பணும் ?
சாம்பசிவம்-
குட்டையைக் குழப்புறதுதானே இவரு வேலை.
சிவாதாமஸ்அலி-
பட்டையை அடிச்சுட்டு மட்டையாகி போறதெல்லாம் கேள்வி கேட்குது.

64 கருத்துகள்:

 1. வாசித்தேன் சார்....
  kovaikkothai.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ தங்களது புதிய தளத்திற்கு எமது வாழ்த்துகள்.

   நீக்கு
 2. தினேஷ் கணவன், திலீப் காதனா? பேரு ஒரே மாதிரி இருக்கு, கணவன் பேரு தினேஷ்னும், காதன் பேரு கபாலினு வச்சு இருக்கலாம்.

  உண்மை என்னனா அவள் தினேஷவிட ஸ்மார்ட்ங்க, நம்ம அல்லக்கை கணவந்தான் இந்த "மிமிக்ரி" வேலை பண்ணி அல்ப்த்தனம் பண்ணுறான்னு தெரிந்துகொண்டு, அவளும் காத்லன் திலீப்பை பிடிக்காதமாதிரி நல்லா நடிக்கிறாள். இனிமேல் திலீப்புடன் அவள் உறவு தடையில்லாமல் தொடரும்.

  இது எப்படி இருக்கு, தல? :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே தாங்கள் சொல்லும் இந்தக் கோல்மால்கள்தான் உலகம் முழுவதுமே திட்டம் போட்டு நிகழ்கின்றது. மறுக்கவே முடியாது.

   நான் பதிவை சுபமாக முடிக்கவே கதையின் போக்கை மாற்றினேன். வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. வருண்.... நானும் மனதில் அப்படித்தான் நினைத்தேன்.......

   நாமெல்லாம் வில்லன்கள் மாதிரியே சிந்திக்கிறோம் இல்லையா? ஹாஹா.

   நீக்கு
  3. நல்லவேளை என்னை நாயகன் என்று சொல்லி விட்டீர்கள். நன்றி

   நீக்கு
  4. ஹா ஹா ஹா என்னா ஒரு வில்லத்தனமான சிந்தனை:)..

   நீக்கு
 3. ஆனாலும் திலீப்புக்கு.. தினேஷ் மாதிரி இல்லேன்னா தினேசுக்கு திலீப் மாதிரி...

  கொஞ்சம் இருங்க கொழம்புது....

  தினேசுக்கு திலீப்பு மேல... அப்படின்னா திலீப்புக்கு தினேசு கார் சாவி... நடுவால அந்த இனிதா இல்லையில்லை கனிதா..

  அட ச்சை... இனிதாவும் இல்லை கனிதாவும் இல்லை.. அங்கே இருக்குறது புனிதா...

  யோவ்.... அது அனிதா....

  அப்போ அது அனிதா..ந்னா
  இது பனிதா.. சரியா...

  நானே கொழம்பிட்டேன்.. இது மினிதா..

  சரி.. அந்த இனிதா.. கனிதா.. எல்லாம்?..

  இதுக்குத் தான் நடுராத்திரியில பதிவு எல்லாம் படிக்கக் கூடாது..ந்றது...

  சரி.. திலீப்புக்கும் தினேசுக்கும் நடுவால அது யாரு சுரேசு?..

  அப்போ புதுசா வந்த வினிதா?...

  அடடா... நல்லா இருந்த மனுசன் இந்த மாதிரி ஆகிட்டாரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா வாங்க ஜி கும்பகோணம், குழப்பவாதி குலசேகரப்பாண்டியன் கதை போலவே இருக்கிறது. ரசித்தேன் கருத்துரையை வருகைக்கு நன்றி ஜி.

   நீக்கு
 4. எல்லாம் நன்மைக்கே....

  நல்லபடியாக முடிந்தது.மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 5. கில்லர்ஜி இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாய் அமைந்திடட்டும்!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. தப்பித்தாள் அனிதா!

  உங்க ரூட்லயே வரேன்...கில்லர்ஜி....தமிழச்சினா போராடி ஜெயிக்கனும் கில்லர்ஜி! முறம் கொண்டு புலியைத் துறத்திய வீரப் பெண்கள் அப்படினுதானே வரும் ஹா ஹா ஹா...அதனால அவனைக் கொன்னுட்டு தற்கொலை பண்ணிக்குவேன்னு சொல்லுறதை விட எனக்கு என் கணவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு எப்படி ஹேண்டில் பண்னனுன்னு தெரியும்னு சொல்லி அவனை விரட்டியிருக்கலாமோன்னு ...ஸாரி கில்லர்ஜி நான் இப்படிச் சொல்றதுக்கு. ஒரு வேளை இப்படியான செய்திகள் நிறைய வருவதாலோ என்னவோ அதைஅறிய வரும் போது மனம் கஷ்டமாகிடுது கில்லர்ஜி. தீர்வுகளே இல்லாதது போல் கொலை தற்கொலை என்று ஒரு ஷண நேரத்தில் செய்வது. அதான் அந்த ஒரு வரியை வாசிக்கும் போது மட்டும் ஏன் பெண்கள் இதற்கும் மேலே சிந்திக்கமாட்டாங்களா? என்று தோன்றியது...

  ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க கில்லர்ஜி. இது என் தனிப்பட்டக் கருத்து...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தங்களது கோணமும் சரியே...
   பண்டைய காலத்தில் முறத்தால் புலியை விரட்டியவர்களில் ஞானி ஸ்ரீபூவுவின் மனைவியும் (எனது அப்பத்தா) ஒருவரே...

   ஆனால் இன்று முறத்தில் புளியை பரப்பி வைத்து வெயிலில் காயவைக்கும் பெண்களே அதிகம் காரணம் வீரம் மழுங்கி விட்டது உண்மையே...

   பீப்பாடல் பாடியவனை நாடு கடத்த வேண்டும் என்று கல்லூரி பெண்கள் போராடினால் வரவேற்று இருக்கலாம்.

   ஆனால்

   அவனை கைது செய்தால் தீக்குளிப்பேன் என்று ஒரு மாணவி சென்னையில் காவல்துறையை அதிர வைத்தாள் இன்றைய கல்வியறிவின் வளர்ச்சி கண்டு ஃபுல்லரிக்கிறது.

   அவ்வகையில் அபுதாபியில் வாழும் தமிழச்சி அனிதாவை நான் களங்கப்படுத்தவில்லை.

   தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 7. இறுதி பகுதியை வாசித்து விட்டேன். பாவம் திலீப். பாவம் தினேஷ். பாவம் அனிதா. விதியின் கைபொம்மைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோருமே இறைவனின் பொம்மைகள்தானே ஜி கிருபானந்தாவாரியார் முதல் தந்தை பெரியார்வரை....

   நீக்கு
 8. "திருவண்ணாமலை திலீப்" கம்பி நீட்டி விட்டார் என்கிறார்கள் உண்மையோ, பொய்யோ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவன்தான் அமெரிக்கா கலிபோர்னியாவில் பண்ணை வீட்டில் வாழ்கின்றானே...

   ‘’அவனுக்கென்ன... வாழ்ந்து விட்டான்
   அகப்பட்டவள் ‘அவள்’ அல்லவோ’’

   நீக்கு
  2. அப்படியா என்ன? ஸ்ரீராம்? போட்டும் போட்டும்....

   இங்க இந்தாளைப் பார்த்ததும் ஆஹா ரொம்ப நாளாச்சே இவர் என்ன ஆனாருன்னு பார்க்க கூகுள்ல தேடினா ஆஆஆஆஆஆஅ இதுவா அந்தாளுன்னு அடையாளமே தெரியாம இல்ல இருக்காரு.இப்ப ரொம்பவே அடையாள மாற்றங்கள்...அப்புறம் என்னவெல்லாமோ சொல்லுறாரு...ஆடு மாடு, சிங்கம் எல்லாம் சமஸ்க்ருதத்துலயும் தமிழ்லயும் பேசுமாம் இவர் பேச வைப்பாராம்...அப்புறம் மூன்றாவது கண்ணைத் திறக்க வைப்பாராமே

   கீதா

   நீக்கு
  3. இப்பத்தான் பார்க்கின்றீர்களா ? கடந்த பதிவின் புகைப்படத்தை கண்டதுமே குவைத் ஜி போல யூகித்து வைத்து இருக்கணும்.

   நீக்கு
  4. கீதா ரங்கன்.... இது என்ன புதுப் புதுக் கதையாக இருக்கிறது?

   கேட்கிறவர்கள் ........ என்றால் கேப்பையில் நெய் ஒழுகும் என்று சொல்வார் போலிருக்கிறது.

   நம்ம ஊரில் (இந்தியாவில்) ஆன்மீகச் சாமியார்கள் படுத்தல் தாங்க இயலவில்லை.

   நீக்கு
  5. ஆன்மீகச் சாமியார்கள் இல்லை தமிழரே... ஆண்'மீகச் சாமியார்கள்.

   நீக்கு
  6. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நித்தியானந்தா சுவாமியைத் திட்டாதீங்கோ:))

   நீக்கு
  7. நித்தியை திட்டக்கூடாதா ?

   நீக்கு
 9. என்னவோ நினைச்சால் சொப்புனு போயிடுச்சே. பாவம் அந்த திலீப்! அனிதாவின் திடமனதுக்கு வாழ்த்துகள். கணவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அனிதாவிடம் சொல்லி விட்டேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. என்னாது... 'அனிதாவிடம் சொல்லிவிட்டேன்' என்று சொல்கிறீர்கள். உங்களைப் பற்றி நல்லா தெரியும் என்பதால் யாரும் எதுவும் நினைக்கமாட்டார்கள்.

   இதுவே வேறு யாரும் எழுதியிருந்தால், இது யாரு புதுசா 'இன்னொரு ஆள் அனிதாவுக்கு' என்று சந்தேகப்பட்டிருப்பார்கள். ஹா ஹா.

   நீக்கு
  3. ஆஹா நீங்களே தினேஷை குழப்பி விடுவீர்கள் போலயே...

   நீக்கு
 10. அனிதாவின் நம்பிக்கை வாழ்க...!

  பதிலளிநீக்கு
 11. அழகாய் எழுதியுள்ளீர்கள். முடிவும் ரசிக்கும் படியாக இருந்தது நண்பரே.

  பதிலளிநீக்கு
 12. கதையை நல்லபடியாக நிறைவு செய்த ஜிக்கு வாழ்த்துக்கள்.
  திலீப் பாவம், தினேஷ் செய்த சதியால் அனிதாவின் நண்பரை பகைவனாக ஆக்கிவிட்டாரே!
  அனிதாவின் நம்பிக்கை வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ தங்களது கருத்தை பகிர்ந்த கொண்டமைக்கு நன்றி

   நீக்கு
 13. அன்பின் ஜி..

  >>> முறத்தில் புளியை பரப்பி வைத்து வெயிலில் காய வைக்கும் பெண்களே அதிகம்!... <<<

  வெயிலில் காய வைக்கும் பெண்களே அதிகம்..

  ஐயோ பாவம்... எவ்வளவு பெரிய கொடுமை இது!?..

  ஆமாம்...

  வீரத் தமிழச்சிகள் - முறத்தையும் சுளகையும் (ம.நெ.த = மதுரை/நெல்லைத் தமிழில் முறம்) கண்டிருந்தார்கள்.. வீட்டில் கொண்டிருந்தார்கள்...

  முறத்தால் புலியையும் விரட்டி அடித்தார்கள்..
  (சமயத்தில் புருசனையும் அடித்தார்கள்.. அரவணைத்தார்கள்...
  ஆனால் விவாக ரத்து என்று நீ.ம., போகவில்லை!.)

  இந்தக் காலத்துப் பெண்களில் 99.9% பேருக்கு முறம் தெரியாது..
  அம்மிக்கல் ஆட்டுக் கல் எதுவும் தெரியாது...

  அப்போ - புளியைக் கரைக்க!?..

  ஒரு சமயம் பள்ளியில் ஆசிரியர் -
  பால் எப்படிக் கிடைக்கிறது என்று பிள்ளைகளிடம் கேட்டதற்கு
  ஆவின் பூத்தில் (!) இருந்து கிடைக்கிறது - என்றார்களாம்...

  அது மாதிரி புளி எங்கேயிருந்து கிடைக்கிறது என்று கேட்டால்
  மசாலாக்காரனின் பாக்கெட்டில் இருந்து கிடைக்கிறது என்பார்கள் -
  இந்த காலத்து நவ நவ நவ நாகரிக யுவதிகள்...

  புளியைக் கரைத்துத் தான் பாட்டிலி அடைத்து Tamarind Paste என்று விற்கிறானே!...

  குடும்ப குத்து விளக்குகள் கூட இட்லி மாவு அரைக்க அலுப்பு கொள்கிறார்கள்...

  இட்லி மாவு கரைக்கத் தெரியுமா.. தெரியாது!...
  எதற்கு அதெல்லாம் - பாக்கெட்டில் தான் மாவு விற்கிறானே...

  வாங்கி இட்லியாக அவித்துக் கொள்ள வேண்டியது தான்...

  அதுவும் கஷ்டம் என்றால் -
  ஆர்டர் போட்டு நாம வியர்வை சிந்தி சம்பாதித்த காசைக் கொடுத்தால்
  தின்ற இட்டலி (இட்லி) + @@.....@@ சட்டினியைத் தருவதற்கு -
  இருக்கவே இருக்கிறான் டொமாட்டோக்காரன்!...

  அந்த மாதிரி @@.....@@ சட்டினியைக் கொடுத்தால்
  அதுக்கும் நியாயம் சொல்லிக்கிட்டு நாலு பேர் வருவான் என்றால்
  அடுத்தவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க நீதி கிடையாது...

  நெலமை இப்படி ஆகிப் போன நேரத்தில முறமாவது.. புளியாவது!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   சவுக்கடியான வார்த்தைகள் உண்மையே இன்றைய பெண்களுக்கு தெரிந்ததெல்லாம் காலையில் இருந்து இரவுவரை வாட்ஸ்-ஆப் நோண்டுவது மட்டுமே....

   எட்டையபுரத்தான் ஆசைப்பட்டது தவறுதானோ.... பாதை மாறும் என்று அவர் நினைக்கவில்லையே...

   நீக்கு
  2. துரை செல்வராஜு சார், கில்லர்ஜி.... நீங்கள் சொல்லுவதில் உண்மையும் இருக்கு.

   சமீபத்திய 15 ஆண்டுகள், இண்டெர்னெட் வளர்ச்சியினால், நாம் வந்த வேர்களை அடுத்த தலைமுறை தெரிந்துகொள்வதில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெளிநாட்டு பாடகர்கள், பாட்டுகள், உணவு முறைகள் ...... தமிழக உணவை அவர்கள் விரும்புவதும் இல்லை.

   என்ன கொடுமை பாருங்கள்......

   நீக்கு
  3. ஆம் நண்பரே அவர்கள் தெரிந்து கொள்வதில்லை என்பது மட்டுமல்ல! நாம் சொல்ல நினைக்கும்போதே பழைய ராமாயணமா ? என்று கேட்டு நமது வாயை அடைத்து விடுகின்றனர்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி.

   நீக்கு
 15. சஸ்பென்ஸ் உடைஞ்சது. நல்ல முடிவு

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  கதை முடிவு சுவாரஸ்யம் குன்றாமல், நன்றாக உள்ளது. கணவனை நம்பிய அனிதா நன்றாக இருப்பாள். தன் மனைவி தனக்கு துரோகம் இழைத்து விடுவாளோ என்ற பயத்தில், தினேஷின் யோசனையுள்ள செய்கை சரிதான். ஆனால் இந்த ஆண்டவன் தீலிப்கிற்கு அவன் வாழ்க்கையில், இப்படியொரு துரோகத்தை இழைத்திருக்க வேண்டாம்.பாவம்.. அவன் விதியை மாற்ற யாரால் முடியும்? முடிவு சுபமானதற்கு வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 17. அதென்ன கதையை சுபமாக முடிக்க்ச எண்ணி உண்மையான முடிவை மாற்றி விட்டீர்களோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மையிலேயே எந்த சம்பவமும் எனக்கு தெரியவில்லை.

   இது முழுக்க, முழுக்க எனது கற்பனை மட்டுமே...

   நீக்கு
 18. கதை நல்லாவே எழுதியிருக்கீங்க. சுபமா முடிச்சிருக்கீங்க.

  ஆனால் பதிவில் சம்பந்தமேயில்லாமல் நித்தியானந்தா படத்தைப் போட்டிருக்கீங்களே... அதுதான் அவ்வளவாப் பிடிக்கலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே கடந்த பதிவில் நாயகிக்கு ரஞ்சி புகைப்படத்தை போட்டு இருந்தேன். ஆகவே இதில் கோ.நாயகனாக (அதாவது வில்லன்) நித்தியை இணைத்து விட்டேன்.

   மேலும் ஒரு அன்பரின் விருப்பத்திற்காக தலைப்பை "திருப்புவனம்" என்று மாற்றி திருப்பம் தந்துள்ளேன். முதலில் தலைப்பு வேறு அது புகைப்படத்திலேயே உள்ளது. அதை மாற்ற இயலவில்லை.

   வருகைக்கு நன்றி.

   நீக்கு
 19. தெளிவா நிம்மதியாகக் கதை முடிந்தது.
  அழகாகக் கதை பின்னுகிறீர்கள். நலமே வாழ்க.

  பதிலளிநீக்கு
 20. ஆல்ரெடி நானே குழப்பவாதி. இதுல இன்னும் கொஞ்சம் குழப்பி விட்டுட்டீங்களே!

  பதிலளிநீக்கு
 21. கணவன் மிமிகிரி பண்ணுறாராம்ம்.. ஆனா அவரோட ஜொஜொஜொஜொந்த மனைவியால அக்குரலைக் கண்டு பிடிக்க முடியாமல் போச்சாம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆருக்கு தோடு குத்துறார் கில்லர்ஜி:) நாங்களெல்லாம் ரெண்டுதரம் காதில குத்தியிருக்கிறோமாக்கும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிமிக்ரி செய்வதை கணவன் என்று எப்படி கண்டு பிடிக்கமுடியும் ?

   நீக்கு
  2. ஒரு மனைவியால கண்டுபிடிக்க முடியாதென்றா நினைக்கிறீங்க.. என்னா பேச்சுப் பேசுறீங்க கில்லர்ஜி.. கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   நீக்கு
  3. போனில் பழக்கப்பட்ட குரல்போல் பேசுபவனை தனது கணவன் என்று நினைக்க தோன்றுமா ?

   கணவனின் உருவ அமைப்பு, நடை, உடை வேண்டுமானால் மனைவிக்கு அத்துபடியாகலாம்.

   நீக்கு
 22. ஆனா உண்மையில திலீப் ரொம்ப நல்ல ஆளாககூட இருந்திருக்கலாம்.. இப்பூடிக் கெடுத்திட்டாரே இந்த தினேஸ்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மனைவியோடு நேரடியாக கலந்துபேசுவதுதான் எப்பவும் சேஃப்...

  இப்படித் திருகுதாளம் செய்தால் இன்று ஹப்பியாக இருக்கலாம், ஆனா ஒரு வருடத்தில் திலீப் பை எங்காவது அனிதா பார்த்துப்பேசி உண்மை அறிஞ்சால்.. தினேஸ் இன் நிலைமை என்ன ஆகும்?:))..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்றாவது சந்தித்தால் அப்போது கதையை வேறு கோணத்தில் எழுதுவோமே...

   நீக்கு
 23. எனக்கு ஒரு சந்தேகம் தெளிவாக்கனும் ... தூங்கும்போது கொல்வதுதான் தமிழச்சீயின் வீரமோ....என் தெரு தமிழ்ச்சீயின் வீரத்துக்கு ஈ..ஈ..ஈ ..டா....கு...மா.... என்று சந்தேகம்..நண்பரே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போர் இல்லையே... எப்படியாவது இவனைக் கொல்லணும் என்னும்போது.....

   அனிதா எந்த ஊர்க்காரியோ...?

   நீக்கு
 24. அருமை
  நம்பிக்கைதானே வாழ்க்கை

  பதிலளிநீக்கு
 25. அருமை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு