தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 16, 2018

Honey என்ற அனிதாதினேஷ் திருமணம் முடிந்த கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும் குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் என்பதால் அடிக்கடி பக்கத்து நாடுகளான ஓமன், குவைத், பஹ்ரைன், கத்தாரில் உள்ள ஃப்ராஞ்களுக்கு போக வேண்டியதிருக்கும், சில நேரங்களில் அங்கேயே தங்கி விட்டு மறுநாள்கூட வரவேண்டியதிருக்கும் தினேஷுக்கு காலேஜில் படிக்கும் காலம் தொட்டே பலவகையான கலை ஆர்வம் உண்டு இங்கு வந்தும் பனிரெண்டு ஆண்டுகள் ஆனாலும் பலமுறை கச்சேரிகளில் கலந்து கொண்டுதான் இருக்கிறான் ஓரளவு நன்றாக பாடவும் செய்வான் இன்னும் குழந்தை இல்லையே என்ற குறையே தவிர வேறொன்றுமில்லை அனிதாவும் இவன் ஊரில் இல்லாவிட்டால் கணினியில் மூழ்கி கில்லர்ஜியின் வலைப்பதிவுகளை படிப்பாள், வதனநூல் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டு பொழுதை கடத்துவாள் அல்லது பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும் தமிழ் ஃபேமிலி வீட்டியிருக்கும், அஞ்சு வயது அஞ்சுவை அழைத்து வந்து கொஞ்சிக் கொண்டு இருப்பாள் குழந்தை என்றால் இவளுக்கு இஷ்டம். வாழ்க்கை அழகாக நகர்ந்து போய்க் கொண்டு இருந்தது....

ஒருநாள் தினேஷும், அனிதாவும் அல் வஹ்தா மாலில் வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு கார் பார்க்கிங் போகும்போது தற்செயலாக எதிரே வந்தவன்தான் திலீப் அனிதாவை பார்த்து விட்டான்.

‘’ஹேய் அனிதா’’ எப்படியிருக்கே ?
திலீப் எப்படி இருக்கீங்க... இங்குதான் வேலையா ?
ஆமா ஒரு கம்பெனில் ஐ.டி. யில் வேலை செய்யிறேன்,
கல்யாணம் ஆயிடுச்சா ?
இன்னும் இல்லை பார்க்கலாம்.
இவர் எனது கணவர் தினேஷ்
இருவரும் கை கொடுத்துக் கொண்டார்கள்
வாங்களேன் ஏதாவது சாப்பிடலாம்...
பக்கத்தில் இருந்த ஸ்டாலில் நுழைந்தார்கள் பேரர் வரவும் லெஸ்ஸி மூன்று என்றான் திலீப்.
இல்லை திலீப் எனக்கு வெண்ணிலா.
‘’ஏய் அனி’’ நீ இன்னும் வெண்ணிலா சாப்பிடுறதை விடலையா ?
(மனைவியை அடுத்தவன் ஒருமையில் அழைக்கிறான் இதென்ன அனி ? தினேஷின் மனசு கேட்டது)

இல்லை திலீப் இன்னும் விடமுடியலை.
அனி உன்னோட வீடு எங்கே ?
எலக்ட்ரா ஸ்ட்ரீட்ல 501 பில்டிங்க்கு பக்கத்து பில்டிங். பிரபல வலைப்பதிவர் ‘’மனசு’’ சே.குமார் அங்குதான் இருக்கிறார் ஆமா நீங்க ?
நான் பின்னாலேதான் மிங்கி டவர்.
அடடே பக்கத்துலதான் இருக்கீங்க இவ்வளவு நாளா, தெரியாமல் போச்சே
நீ மனசு குமாரோட கதைகள் எல்லாம் படிப்பியா ?
பின்னே எவ்வளவு அழகா கதையை நகர்த்திக் கொண்டு போவாரு... நீங்க படிக்க மாட்டீங்களா ?
எனக்கு இப்பவெல்லாம் நேரம் இல்லை உனக்கென்ன... கணவர் வேலைக்கு போனதும் வீட்டிலே நீ மட்டும் ஃப்ரீயாக இருப்பே.. நீ காலேஜுல படிக்கும் போதே புத்தகப் பிசாசுதானே...
(வீட்டிலே நீ மட்டும் ஃப்ரீயாக... பிசாசு ? தினேஷின் மனசு கேட்டது)

லெஸ்ஸியும், வெண்ணிலாவும் வர திலீபும், அனிதாவும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டே பேசப்பேச அனிதா சிரித்துக் கொண்டே... இருந்தாள் தினேஷ் என்ற ஜடம் பக்கத்தில் இருக்கிறதே என்ற சிந்தையே இல்லாமல்...
(பேரர் லெஸ்ஸியில் தனக்கு மட்டும் எதற்கு மிளகாய்ப் பொடியைப் போட்டான் ? தினேஷின் மனசு கேட்டது)

எதிரில் இருந்த பேனரில் வாங்கிய கூலிக்கு மாரடிக்க கல்யாண் ஜூவல்லர்சில் நகைகள் வாங்கச் சொல்லி செயற்கையாக சிரித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாராவையும், மாமனாரையும் தினேஷின் கண்கள் முறைத்துக் கொண்டு இருந்தன..
(ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் மன்னிக்கவும் இது கில்லர்ஜியின் மனசு)

பேசினார்கள், பேசினார்கள் லெஸ்ஸி தீர்ந்தும் பேசினார்கள் தினேஷ் கணைக்க, கலைக்கப்பட்டதைபோல் உணர்ந்து சரி கிளம்பலாம் வலுக்கட்டாயமாக திலீப்தான் பணம் கொடுத்தான்.
அவசியம் வீட்டுக்கு வாங்க,
கண்டிப்பாக வாரேன் அனி

தொல்லைபேசி இலக்கங்கள் இலக்கு மாறின இலக்கணம் மீறி இலக்கியம் பாட... மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் காலை 11.30 மணிக்கு வந்தவன் மதியம் சாப்பிட்டான் பேசினான், பேசினான் மாலை 03.00 வரை பேசியதில் தினேஷுடன் பேசியது ஒரு முப்பது முதல் நாற்பத்து ஐந்து வரையிலான வார்த்தைகளிருக்கும் கைப்பேசி போக வீட்டு தொலைபேசி நம்பரும் வாங்கிக் கொண்டு போனான் பிறகு வாராவாரம் வந்தவன் வாரத்தில் இரண்டு முறை வந்தான், பிறகு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்தான், தற்போது தினம் பல நேரங்களில் தினேஷுக்கு உணவு வீட்டில் அலுவலகத்திலிருந்து எப்பொழுது வீட்டு எண்ணுக்கு அழைத்தாலும் பிஸி, செல்லுக்கு அழைத்தால் தாமதமான ரிசீவ்ட் கேட்டால் கிச்சனில், பாத்ரூமில்... ஏதோவொன்று தன்னை விட்டுப்பிரிவது போன்ற உணர்வு தினேஷுக்கு வேலையில் கவனம் சிதறியது...

இது நடந்தது கடந்த ஒரு வருடமாக....
இன்று...

தொடரும்...

69 கருத்துகள்:

 1. ஆஹா !!இன்னிக்கு நானே முதல் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், வாழ்த்துகள்.

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பூனை தூங்கிட்டால் எலிக்குக் கொண்டாட்டமாமே அப்பூடி ஆச்சு என் நிலைமை :))

   நீக்கு
  3. பூனை தெரியும் எலி யாரு ?

   நீக்கு
  4. மீனை எலியாக்கிட வேண்டியதுதான்:)

   நீக்கு
  5. ஓஹோ... "தங்கமீன்"

   நீக்கு
 2. அந்த அஞ்சு வயது அஞ்சு :) இதை பார்த்தா தேம்ஸ் கரை புரண்டோடபோது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊரணி இன்னும் விடியலையோ...

   நீக்கு
  2. என்னாதூஊஊஊஊஉ அஞ்சுக்கு அஞ்சு வயசோ?:) இது ரெம்ம்ம்ம்ம்ப ஓவரூஊஊஊ ஜொள்ளிட்டேன்ன்ன்.. இதை சிறீ சிவசம்போ அங்கிளின் கவனத்துக்குக் கொண்டு போக இருக்கிறேன்:))..

   உங்களுக்கு வேறு படமே கிடைக்கல்லியோ கில்லர்ஜி.. என்னைக் கேட்டிருந்தால் அஞ்சுட போட்டோவை அனுப்பி வச்சிருப்பேனே:)).. நல்லவேளை கேட்கல்ல நீங்க...

   நீக்கு
  3. இப்படத்தின் காரணம் அடுத்த இறுதிப்பகுதியில் தெரியும். வருகைக்கு நன்றி.

   நீக்கு
 3. சஸ்பென்ஸில் முடிச்சிருக்கீங்க :) பத்து ஆண்டு கழித்து இப்போ நிலை என்னவாயிருக்கும்னு யோசிக்கிறேன் .சீக்கிரம் அடுத்த பார்ட் எதிர்ப்பார்க்கிறேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வ்வ்வ் :) ஒரு எப்போ எப்படி பத்து ஆச்சு ?? :)
   சரி நானேதான் கவனப்பிசகால் பத்துன்னு பார்த்திருப்பேன்

   நீக்கு
  2. விரைவில் முடிவுப்பகுதி.

   நீக்கு
 4. கன்னா பின்னாவென்று நினையுங்கோ என்று மூடியாச்சா.....
  ok.. next time...
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 5. ஆஹா... கள்ளமில்லா அனிதா நட்புக்கு இலக்கணமான திலீப்புடன் பேசுவதை தினேஷ் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறாரா? இல்லை வேறு திசையில்பயணமாகிறதா கதை? தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஶ்ரீராம்.... கள்ளமில்லா நட்பு என்பதற்கு வரையரை உண்டு. திருமணம் என்பது வேலி என்று ஏன் சொல்கிறார்கள்?

   எந்த நிலையிலான நட்புகளும் கணவனுக்குப் பிறகுதான். எதற்கும் அளவுகள் இருக்கிறதே

   நீக்கு
  2. 'கள்ளமில்லாத நட்பு' ஏற்கனவே அனிதாவை ஸ்ரீராம்ஜிக்கு பழக்கமோ... ?

   நீக்கு
  3. ஹா ஹா ஹா ஸ்ரீராம் எதுக்குப் பதட்டமாகிட்டார்ர்:))?:)... அனி.. போன் நம்பர் ..இதெல்லாம் ரொம்ப ஓவரூஊ:)

   நீக்கு
  4. எந்த நட்பாயினும் கணவரோடு சேர்ந்து பேசும்போது ஓகேயாகிடும், இது தானே டக்கு டக்கென முடிவெடுத்து நம்பர் கொடுப்பது அட்ரஸ் கொடுப்பது எல்லாம் கொஞ்சம் கணவருக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.. அதில வேற கில்லர்ஜியின் போஸ்ட்டும் படிக்கிறாவாம்.. இது எங்கின போய் முடியுமோ அத சிறீ சிவசம்போ அங்கிளுக்கே வெளிச்சம்:)..

   நீக்கு
  5. உண்மை கணவரோடு சேர்ந்து பேசினால் பிரச்சனைகள் குறைவாகும். ஆனால் கணவரை ஜடமாக நினைத்தால் ???

   கில்லர்ஜி பதிவு படித்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமாமே... ஊருக்குள்ளே பேசிக்கிட்டதை சொன்னேன்.

   நீக்கு
  6. ஹா ஹா ஹா கில்லர்ஜியின் போஸ்ட் படிச்சால் தீர்வு கிடைக்குதோ இல்லயோ, மக்கள் ஏதாவது போராட்டத்துக்கு ரெடியாகிடுவினம்:))

   நீக்கு
  7. ஆம் கலகம் பிறந்தால் நியாயம் கிடைக்கும்.

   நீக்கு
 6. அவர்களிருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது தினேஷின் உணர்வுகளை அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள் ஜி.​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிதலுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

   நீக்கு
 7. முடிவு சுகமாக இருக்கப் பிரார்த்தனைகள். நட்பு மட்டுமே இருக்கட்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அடுத்ததுக்கு ஆவலோடு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது பிரார்த்தனைக்கும், ஆவலுக்கும் நன்றி.

   நீக்கு
 8. ஐயோ.... கில்லர்ஜி..... நான் கேள்விப்பட்ட கதைகளைப்போல் (நடந்தவைகள்போல்) ஆகிவிடக்கூடாதே..... மிடில் ஈஸ்டில் இது ஒரு பிரச்சனையல்லவா.....

  நடை நன்றாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கேள்விப்பட்டீர்கள் என்பதை நானறியேன். வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. என்ன நெல்லைத்தமிழன் என்ன?:) மிடில் ஈஸ்ட்டிலே எது பிரச்சனை?:) என் காதில ஆவது ஜொள்ளுங்கோ கில்லர்ஜி ஒட்டுக் கேட்டிடப்போறார் கர்ர்ர்ர்:))

   நீக்கு
  3. நானும் அறியாமல்தான் கேட்கிறேன்.

   நீக்கு
  4. பொதுவாக.... கணவர் வேலை செல்வார். மனைவி வீட்டில் இருப்பார். அப்போது வேறு நட்புகள் ஏற்படுவதாக பல இடங்களில் கண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து சவுதியில் ஒருவர் வாழ்வு அதனால் குலைந்துபோனது. எந்த நட்பும், கணவர் இருக்கும்போது மட்டும் இருக்குமாயின் அதில் சலனமோ தவறுகளோ ஏற்படாது. இது கணவனுக்கும் பொருந்தும்.

   நீக்கு
  5. ஆம் உண்மையே... வெளிப்படையாகவே இருந்தால் பிரச்சனை இல்லை.

   அபுதாபியில் நான் ஆறு குடும்பங்களுடன் பழகி வந்தேன். என்னை யாருமே வேற்றுமையாக நினைத்ததில்லை. இறுதிவரை... இன்றுவரை கண்ணியமாக தொடர்கிறது.

   நான் யோக்கியன் என்பதற்காக இதை சொல்லவில்லை.

   நீக்கு
  6. இப்பிரச்சனை மிடிலீஸ்ட்டில்தான் அதிகம் எனச் சொல்ல முடியாதே நெ தமிழன்... எங்கும்தான் நடக்கிறது... அதுக்குப் பல காரணங்கள் சொல்லலாம் ... ஒருவகையில் கணவர்மாரும் காரணம்தான்.... தாம் வேலைக்குப் போகும் களைப்பில் மனைவியுடன் நேரம் செலவிடுவது குறைவாகிடுது, பலருக்கு அஜஸ்ட் பண்ண தெரிவதில்லை இதனால வீட்டில் இருக்கும் மனைவிமார் , யாராவது கொஞ்சம் அதிகம் அக்கறை காட்டும் ஆண்கள் கிடைக்கும்போது மயங்கி விடுகிறார்கள்... இன்னும் நிறைய காரணம் சொல்லலாம் இப்போ ரைம் போதவில்லை...

   நீக்கு
  7. அப்போ கில்லர்ஜி ஜோசியர் இல்லயோ?:) ஹா ஹா ஹா..

   நீக்கு
  8. அதிரா ஒருவகையில் இல்லை முழுகாரணமும் கணவனே பொருப்பாளி.

   அயல் நாட்டில் தனது கணவனை மட்டுமே நம்பி போகும் மனைவி.

   கணவன் இதை சரியாக உணர்ந்து அவளது எல்லாவிதமான விடயங்களையும் (பொழுது போக்கு மட்டுமல்ல, கடலை போடுவது உள்பட) பூர்த்தி செய்தாக வேண்டியது கடமை.

   இதைச் செய்ய இயலாத கணவர்கள் மனைவியை நாட்டில் தாய்-தந்தையோடு விட்டு வரவேண்டும்.

   வருடத்துக்கு ஒருமுறை அவசியம் விடுமுறையில் வந்தால் போதுமே.

   நீக்கு
  9. இதேதான் கில்லர்ஜி, பொதுவாக பெண்களால் பேசாமல் இருக்க முடியாது, அப்படிப்பட்ட பெண்களை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குப் போனால், எப்போ கணவர் வருவார் எனக் காவல் இருப்பார்கள், அப்போ அதை உணர்ந்து கணவரும் வீட்டுக்கு வந்ததும் மனைவியுடன் பேச வேண்டும்., இருவரும் வேர்க் பண்ணுவோர் எனில் பிரச்சனை குறைவு. இக்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியால், வ்ட்சப் வைபர் என பிரீயாக ஊருக்கு பேச முடியும், முற்காலத்தில்?

   நீக்கு
  10. ஆம் இதை கணவன்தான் சரியான முறையில் வழி நடத்தி செல்லவேண்டும்.

   இது அறியாதவர்கள் வீட்டில்தான் மூன்றாம் மனிதன் உள்ளே நுழைந்து விடுகிறான்.

   முடிவில் பாதிப்பு மூன்றாம் மனிதனுக்கு அல்ல!

   நீக்கு
 9. குடும்பத்தில் குழப்பமோ? அது என்ன கில்லர்ஜியின் பதிவுகளைப் படிப்பவர். நான் ஏற்க மாட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே...
   ஏன் கதையில் வருபவர் எனது வாசகியாக இருக்ககூடாதா ?

   நீக்கு
 10. ஆண் பெண் உறவுகள் சிக்கலானது.ஆனால் அதிகம் பாதிக்கப் படுபவர்க்ள் பெண்கள்தான். பொழுது போக்காகவே சில ஆண்கள் இதுபோல் செய்கிறார்கல் போலிருக்க்கிறது. இன்றுஎன்ன நடந்திருக்கும் எனது ஊகம். திலீப்புக்கு கல்யாணம் ஆகி இருக்கும்.அதற்கப்புறம் கண்டு கொள்ளாமல்போயிருப்பான்.சலனப் பட்டதின் விளைவை அனுபவைத்துக் கொண்டிருப்பார் அனி/ சரிதானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது யூகத்தை விரைவில் தெளிவுபடுத்துகிறேன்.

   நீக்கு
 11. அடுத்து என்ன நடந்திருக்கும் என்கிற ஆவல் பிறக்கிறது ஜி...

  பதிலளிநீக்கு
 12. அடுத்தது என்ன என்ற பதைபதைப்பு.

  நல்ல முடிவாக இருக்கட்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எல்லாம் அவனி(யில் வாழ்பவ)ன் செயல்.

   நீக்கு
 13. ஆஹா...
  ரொம்ப நாளாச்சேன்னு இரவு செல்போன் இங்கிட்டு வந்தா... செம கதை அண்ணா...

  இங்கு நடப்பவை நாம் அறிந்ததே... அப்படி இல்லாதிருக்கட்டும்...

  இடைச் செருகலாய் என் பெயரும்... ஹா..ஹா...

  இப்ப லேப்டாப் போயி 1 மாசம் ஆச்சு... மலையாளி சரி பண்ண 6௦௦ திராம்ஸ் கேட்கிறான். வேண்டான்னு போட்டு வச்சுட்டேன். அதான் நோ எழுத்து...

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எல்லாம் அவர்கள் பேசியதே எழுதப்பட்டுள்ளது.

   நீக்கு
 14. நோ கெஸ்....அங்கு அல்லது உலகில் நடப்பது என்ற உண்மைக் கதை என்று இல்லாமல் கதை முடியட்டும்.

  தினேஷின் ஃபீலிங்க்ஸை சொல்லியிருக்கும் இடமும் நல்லாருக்கு...வேறு விதமாகக் கொண்டு சென்றாலும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது...உலகில் நடப்பது போல் இல்லாமல் எழுதும் ஆசிரியரின் எழுத்தில் கதை வித்தியாசமாய் இருக்கட்டும் என்று எண்ணுகிறது மனம். நல்லாருக்கு கில்லர்ஜி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஆ'சிரி'யர் மீது வைத்துள்ள எண்ணம் சறுக்க கூடாது.
   இது எனது கற்பனை மட்டுமே...

   நீக்கு
 15. இதைப் படித்தபோது துபாயில் நடந்ததாகக் கூறப்பட்ட ஒரு நிஜக்கதை நினைவில் ஆடியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா எல்லோரும் சொல்கின்றார்கள் என்ன நிகழ்வு என்பது நான் அறியவில்லை.

   இது எனது கற்பனை மட்டுமே...

   நீக்கு
  2. கில்லர்ஜி... சவுதியில் ஒரு நல்ல வேலையில் ஒருவன் இருந்தான். அவன் கூட அவன் நண்பனும் தங்கியிருந்தான் (கொஞ்சம் சாதாரண வேலையாயிருக்கலாம், வேறு சமயத்தைச் சேர்ந்தவன்). முதலில் உள்ளவன் திருமணம் ஆனபிறகு மனைவியை அழைத்துக்கொண்டு சென்றான். வீட்டின் ஒரு அறையில் நண்பன் தங்கியிருந்தான். மனைவி அது கூடாது, அவனை வேறு வீட்டில் தங்கிக்கச் சொல்லுங்கள் என்று பலமுறை சொல்லியும் கணவன், அவன் நல்லவன் என்று சொல்லி மனைவி வாயை அடைத்துவிட்டான். ஒரு முறை கணவன் ஆபீசிலிருந்து வந்தபோது இருவரையும் தவறான கோலத்தில் கண்டு, கடைசியில் மனைவியோடு விவாகரத்தில் முடிந்தது. என் அனுமானம், 'கணவனின் நம்பிக்கையை'வைத்து அந்த நண்பன் இந்தப் பெண்ணை பயமுறுத்தி வசப்படுத்தியிருப்பான் (இருந்தாலும் உண்மை யாருக்குத் தெரியும்). இது மிகுந்த அதிர்ச்சியான சம்பவம்.

   இதுபோன்ற பல சம்பவங்களை நான் கேள்விப்பட்டிருக்கேன்.

   நீக்கு
  3. இதன் அடிப்படை தவறே கணவன்தானே நண்பரே... இன்று அவளது வாழ்க்கைதானே கேள்விக்குறி ?

   நீக்கு
  4. ஆமாம் கில்லர்ஜி... இதில் கணவன் தான் தவறு செய்தவன். மிடில் ஈஸ்ட்ல இந்தப் பிரச்சனைலாம் இருக்கு.

   நீக்கு
  5. வாடகையில் கொஞ்சம் மிஞ்சமாகிறது என்பது மனக்கணக்கு, ஆனால் வாழ்க்கையே நஷ்டம் என்பது விதியின் கணக்கு.

   இந்த இடத்தில்தான் விதியை மதியால் வெல்ல முடியும் என்பது அறிவாளியின் கணக்கு நண்பரே...

   நீக்கு
 16. மனசு குமாரின் எழுத்தை படிப்பவள் குடும்பத்தினரிடம் அன்பாய் பாசமாய் தான் இருப்பாள்.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது ஆணித்தரமான நம்பிக்கை ஆச்சர்யமளிக்கிறது.

   தொடர்வதற்கு நன்றி சகோ

   நீக்கு
 17. மார்கழி மாசம் விடியக்காலையிலயே வித்தியாசமான சித்தியானந்த தரிசனமா இருக்கேன்னு நெனைச்சேன்...

  கதையைப் படிக்கலை.. ஏன்னா.. வேலை கொஞ்சம் அதிகம்...

  காலையில ஏழு எட்டு மணி வாக்கில கதையப் படிச்சா -
  ஆகா... ந்னு இருந்தது...

  கதை இப்படிப் போகுமா.. அப்படிப் போகுமா!?..
  எப்படியாவது போகட்டும்!.. எதிலயாவது முடியட்டும்..
  நமக்கும் பொழுது போகணுமில்லே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. வாங்க ஜி சரியான பார்வையில் பார்த்து கருத்துரை தந்து இருக்கின்றீர்கள்.

   நீக்கு
 18. கதை எப்படித்திரும்பினாலும் யாருக்கும் பாதிப்பில்லாமல் இருக்கட்டும். சஸ்பென்ஸ் நல்லா இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 19. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  தாங்கள் எழுதிய கதையை படித்தேன். ஆரம்பமே அழகான எழுத்து நடையுடன் மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள். தொடரும் என்ற இடத்திலும் வித்தியாசமாக தங்கள் பாணியில் "இன்று"... என நிறுத்தி நன்றாக உள்ளது. அடுத்தது வழக்கப்படி தினேஷ் மனம் உடையாமல் முடித்தால் நலம். விரைவில் தங்கள் கற்பனைத் திறனை ரசிக்க அனைவரைப் போலவும் நானும், ஆவலாய் உள்ளேன். தாமதமாக வந்து படித்தமைக்கு வருந்துகிறேன். நாளை ஆரம்பிக்கும் பொழுது (இரவு 12க்கு) தீலீப் அல்லது தினேஷின் முடிவு தெரிந்து விடுமென நினைக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி இன்று இரவு 12:00 மணிக்கு கதையின் இறுதிப்பகுதி வெளிவரும்.

   நீக்கு