தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 02, 2023

கொரோனா வியாபாரம்

ணக்கம் நண்பர்களே... இன்று மருத்துவமனை எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறதே... இதற்கான அடிப்படை காரணம் என்ன? இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை நாம் உச்சி முகர்ந்து வரவேற்று ஆராதிக்கின்றோம். காரணம் நமக்கு எல்லாமே விரைவாக கிடைக்க வேண்டும் என்ற பேராவல்.
 
முதலில் இந்த நோய்களின் தொடக்கம் எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். நாம் அன்றாடம் குளிப்பதற்கு அழுக்கு தேய்க்க உபயோகிக்கும் சலவைக்கட்டி (Soap) இருக்கிறதே இதை எதற்காக கண்டு பிடித்தார்கள்? அதன் பிறகு வியாபாரத் தந்திரத்தில் மக்களிடம் அதை எப்படி விளம்பரப்படுத்தி இன்று திரைத்தாரகைகளின் அழகு சோப் என்று நம்மை மதிமயக்கி இந்த நிலையை விட்டு விலகிச் செல்ல முடியாத வலைக்குள் வைத்து விட்டார்கள். இல்லை வைத்து செய்கிறார்கள் என்பது நமக்கு தெரியுமா?
 
இன்று நாம் அலைபேசியை தவிர்த்து விட்டு வாழமுடியுமா? சோறு இல்லாமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் அலைபேசி வேண்டும். தொடக்கத்தில் 2-G பிறகு 3-G பிறகு 4-G இப்ப 5-G அடுத்து 6-G ஆம் இந்த அலைக்கற்றைகள் நடமாடும் மக்களின் இதயத்தை தொட்டுக் கொண்டுதான் போகின்றது. நாம் இந்த வலையத்தை விட்டு எப்பொழுது விலகுவோம் மரணத்தன்று ஆம் அதுவரையில் வெளியேறி விடமுடியாது.
 
சரி சலவைக்கட்டிக்கு வருவோம் இதை கண்டு பிடித்தது தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை முடிந்ததும் கையில் இருக்கும் எண்ணை பிசுபிசுப்புகளை கழுவுவதற்கு உபயோகப்படுத்தும் ஒருவகை திரவத்தை கொண்டு வந்தார்கள், பிறகு அதனை சாதாரண வேலை செய்யும் தொழிலாளர்களும் உபயோகப்படுத்தினார்கள். நாளடைவில் இதனை எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள்.
 
இங்குதான் வியாபாரப்புத்தி வேலை செய்தது வீட்டில் சமையல் வேலை செய்த பெண்களும் கழுவுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நாம்தான் புதுமையை வரவேற்கும் புண்ணாக்கு வம்சமாச்சே... அடடே தேங்காய் நார்களுக்கு இது தேவலையே.. என்ற நிலை வர இது தேவையானதே... என்ற கோணத்தில் சிந்தித்தவர்கள் கை, கால், கழுவியது போதாதென்று குளிக்கும் போது உடலுக்கும் உபயோகப்படுத்தினார்கள்.
 
அதன் பிறகு இதில் வாசனைத் திரவியத்தையும் குழைத்து திரைப்படக் கூத்தாடிகளை வைத்து விளம்பரப்படுத்தி. இன்று சலவைக்கட்டி இல்லாமல் நாம் குளிக்கவே மாட்டோம். என்ற நிலைப்பாடு. விதவிதமான வடிவங்களில் விதவிதமான வண்ணங்களில் நிறுவனங்கள் தயாரித்து கொண்டுதான் இருக்கின்றனர். சரி இதனால் என்ன பிரச்சனை? இங்குதான் மருத்துவதுறை உருவாக்கம் தொடங்கியதின் பின்னணி காரணம்.
 
பணமே குறிக்கோள் என்ற சிந்தனைக்கு மனிதன் போய் விட்ட காரணத்தால், மனிதநேயம் மறந்து இறந்து வெகுகாலமாகி விட்டது. புதிய வியாதிகளை உருவாக்கி, அதற்கு பெயர் சூட்டி பிறகு அதனை குணப்படுத்துவது. என்ற கோட்பாட்டில் மனிதன் நுழைந்து விட்டான். இவைகள் இன்னும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகும் என்பதில் ஐயமில்லை.
 
உணவுகளில் கலப்படம் செய்து வியாதிகளை உருவாக்கி விடுகின்றார்கள், கோழி இறைச்சிகளின் மூலம் வியாதி, பால் பவுடர்களின் மூலமாக வியாதி, இனிமேல் அலைபேசி வழியாகவும் வியாதிகளை பரப்புவார்கள். காரணம் மக்கள் அலைபேசியை கை விடப்போவதில்லை. இயற்கை உணவை மறந்து செயற்கை மோகத்தில் வீழ்ந்ததின் விளைவு நாம் மட்டும் அழிவதில்லை, நமது சந்த்திகளையும் அழிக்க துணை போகிறோம் என்பதே உண்மை.
 
நாம் பயன்படுத்தும் சலவைக்கட்டிகளில் இருக்கும் மருத்துவ திரவியங்கள் நமது உடலில் இருக்கும் கோடிக்கணக்கான நுண்ணிய துளைகளை அன்றாடம் அடைத்துக் கொண்டே வருகின்றன. அதாவது இன்றைய மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரையில்... மனிதனுள் இருக்கும் கெட்டநீர் நமது உடலை விட்டு வெளியேற்றுவது சிறுநீர் என்று மட்டுமே நாம் நினைத்து வாழ்கிறோம் அதுதான் இல்லை. உடல் முழுவதுமே கோடிக்கணக்கான வழிகளை இறைவன் நமக்கு படைத்து இருக்கிறான்.
 
நாம் அவைகளை உணர்ந்து கொள்ளாமல் விஞ்ஞான வளர்ச்சியில் மூழ்கி முத்தெடுப்பதாக நினைத்து மூடர்களாக வாழ்கிறோம். அந்த கெட்டநீர் வெளியேறாமல்தான் நமக்கு புதுப்புது வியாதிகள் உருவாகின்றன... எல்லாம் உலகின் மூலை முடுக்குகளில் மக்களுக்கு தெரியாமல் மக்களோடு வாழும் இலுமினாட்டிகளின் மூளையில் தோன்றிய வியாபாரப்புத்தி. கொரோனாகூட வியாபாரத்துக்காக உருவாக்கப்பட்ட நோய்தானே...
 
நமது அடுத்தடுத்த சந்ததிகளின் வாழ்வு மிகவும் கொடூரமாகத்தான் இருக்கும். அதை சில நேரங்களில் நான் நினைத்துப் பார்த்தாலே மனது கனக்கிறது. என்ன செய்வது ? இனிமேல் உயிருள்ள மனிதன் வாழ்வை உயிரற்ற பணமே முடிவு செய்யும். நான் என்றுமே சொல்வது விஞ்ஞான வளர்ச்சி, மனித வாழ்வுக்கு வீழ்ச்சியே... வாழ்க வையகம்.
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

46 கருத்துகள்:

  1. கில்லர்ஜி, உங்கள் ஆதங்கம் எல்லாம் சரிதான்....ஆனால், நாம் இப்படியே சொல்லிக் கொண்டு போனால் கற்காலத்தை விட்டு வெளியே வரவே முடியாது...அதற்கு முடிவே இல்லை. விஞ்ஞான வளர்ச்சியைக் குற்றம் சொல்லிக் கொண்டேதான் இதோ இணையத்தை, கணினியை, அலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞான வளர்ச்சி முழுவதும் கண்டிபபக வீழ்ச்சி என்று சொல்ல முடியாது. கத்திக்கு இரு பயன்பாடுகள் போலத்தான். எதையுமே நாம் balanced ஆகப் பார்க்க வேண்டும். நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு...

    விஞ்ஞான வளர்ச்சி இல்லை என்றால் என்னோடு யாருமே பேசியிருக்கமாட்டாங்க. பேசியிருக்க முடியாது. எனக்குச் செவி கேட்காது. அதற்கான உபகரணம் அணிந்துகொண்டுதான் பேச முடியும். இதுவும் எத்தனை வருடங்களுக்கோ தெரியாது...இப்போது வரை ஒடுகிறது.

    நம் பதிவர்கள், அரவிந்த், திருப்பதி மகேஷ்....பார்வைத் திறன் அற்றவர்கள். அவங்களால இன்று புத்தகங்கள் வாசிக்க முடிகிறது...பதிவுகள் எழுத முடிகிறது என்றால் காரணம் இந்த வளர்ச்சியே.

    இதோ நீங்கள் எழுதுவது உட்பட....கில்லர்ஜி என்பவரால் எழுத முடியும், இத்தனை நட்புகளைப் பெற முடியும் என்பது உட்பட...

    நாம் ஒவ்வொன்றையும் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தே இருக்கு.
    நம்மைச் சுற்றி உள்ளவற்றில் நல்லதை எடுத்துக் கொண்டு மற்றவற்றைக் கடந்து செல்வதே மேல் என்பதே என் தனிப்பட்டக் கருத்து. எனக்கும் சில ஆதங்கங்கள் வரும் தான் ஆனால் நல்லதை எடுத்துக்கொண்டு கடக்க வேண்டியதுதான். உலகமோ காலமோ நமக்கு நிற்காது கில்லர்ஜி. நாம் தான் அதனோடு ஓட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்று சொல்ல விட்டுப் போச்சு...என்னாலும் பேசியிருக்க முடியாது...நமக்குக் காது கேட்கலையே....அவர்கள் சொல்வது புரியாதே. எல்லாரும் எழுதியா காட்ட முடியாதே.. எனக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகரித்திருக்கும்...

      கீதா

      நீக்கு
    2. நீங்கள் இப்படியே சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்கள்...

      செலுப்போன் வருவதற்கு முன்பு வரை கற்காலத்து மனிதன் வாழ்ந்தது நாகரிகம் இல்லையா?...

      செலுப்போன் போன்ற நாகரிகங்களால் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்த முடிவதில்லை...

      தனி மனித நல்லெண்ணங்களை
      நவீன தொழில் நுட்பங்கள் பாழ் படுத்துகின்றன..

      நீக்கு
    3. To, Geetha
      வருக விஞ்ஞான வளர்ச்சி என்பது கண்டு பிடித்தவர்கள் நன்மையை கருதியே எதிர் கொண்டார்கள்.

      ஆனால் இதை எதிர்மறையாக பயன் படுத்துபவர்களே அதிக சதவீதம் மக்கள் வாழ்கின்றனர்.

      இது உலகின் எல்லா நாடுகளும் அடக்கமாவர். கற்காலத்து மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான் என்பது உண்மை.

      இன்று எதை நோக்கி ஓடுகிறோம் என்பது யாருக்கும் புரியவில்லை.

      நீக்கு
  2. மூன்றே சீர்கள் மனிதனுக்கு :

    நன்றின்பால் உய்ப்பது அறிவு...

    பதிலளிநீக்கு
  3. தொட்டது தொண்ணூறிலும் ஊழல்.. ஊழல்.. ஊழல்... அது இன்றி ஏதும் இல்லை.. ரோட்டோரத்தில் மாம்பழம் விற்கிறவன் தொட்டு சமூகத்தில் எல்லாத் துறையிலும் ஏமாற்றுகின்றார்கள்..

    நாளொன்றுக்கு நூறு ரூபாய் கூட ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் ஏழை பாழைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஏழைக்கும் இறைவன் மூளையைக் கொடுத்தான், வெறும் ஐநூறுக்கு வாக்களித்து விட்டு இன்று தெருவில் நிற்கிறான்.

      நீக்கு
  4. விஞ்ஞான வளர்ச்சி மனிதனுக்கு வீழ்ச்சியே!..

    பதிலளிநீக்கு
  5. நாலு தொத்தல் மாடுகளை வைத்துக் கொண்டு ஒருவேளைக்கு நாற்பது லிட்டர் பால் ஏவாரம்..

    பாதிக்கு மேல் முனிசிபாலிடி தண்ணி என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை..

    எல்லாம் நவீன விஞ்ஞானம்..

    பதிலளிநீக்கு
  6. மாடுகளையும் மாட்டு வண்டிகளையும் ஒழித்தாயிற்று.. சாதாரண வழித்தடத்தில் ஆயிரக்கணக்கான இருசக்கர நாற்சக்கர வாகனங்கள்.. இதற்கிடையே ஆற்று மணல் அள்ளுவதற்கு பிரம்மாண்டமான லாரிகள்..

    போக்குவரத்து நெரிசல் என்று
    சாலையோர மரங்களை அழித்தாயிற்று..

    என்னைப் போன்ற கிழடுகள் பேருந்துக்காக ஒதுங்கி நிற்க நிழல் இல்லை..

    நாளைக்கு ஆடிப் பெருக்கு..

    அவன் குடி வாள்கே..
    இவன் குடி வாள்கே.. மதுப்பிரியன்
    எல்லாரும் வாள்கே..

    நவீன விஞ்சானம் வாள்க வால்கே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நிலைக்கு வந்ததும் இன்னும் மனிதன் விவசாயத்தின் மாண்பை புரிந்து கொள்ளவில்லை.

      சீமான் ஒருவரால் மட்டுமே அவ்வப்பொழுது விவசாயம் என்ற வார்த்தை பேசப்படுகிறது.

      நீக்கு
    2. துரை செல்வராஜ் ஐயா வணக்கம் தமிழர்களின் அறிவியல் அறிவை என்றும் மறைக்க முடியாது ஆனால் தற்காலத்தில் தமிழர் வேளாண்மை தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் இரண்டு குழுக்களும் தற்பொழுது தமிழர்களின் அறிவியலை வெளிக்கொண்டு வருகிறார்கள் தற்போது நடப்பது ஆடி மாதம் அல்ல ஆவணி மாதம் பிறந்து விட்டது மேலும் இதைப் பற்றி தகவல் அறிய விண்ணியலும் வாழ்வியலும் யூட்யூப் சேனலை பார்க்கவும் அதில் telegram லிங்க் கொடுத்து இருப்பார்கள் மூன்று ஆண்டுகால ஆய்வு அதில் இருக்கிறது பருவ காலங்கள் மாறிவிட்டது என்பது உண்மை அல்ல மாதங்கள் தான் நாம் மாற்ற வேண்டும் தமிழர்களின் ஜோதிடம் தற்போது இருப்பது வானத்தை பார்க்காமல் கணிக்கப்படுவதால் பிழைகள் உள்ளது பஞ்சாங்கமும் நடைமுறையில் தவறாக உள்ளது. தமிழர்களின் சித்தரியல் நாட்காட்டி இலவசமாக கொடுக்கப்படுகிறது வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் வாட்ஸ் அப்பில் எனது ஈமெயிலில் இருப்பது தான் வாட்ஸ் அப் நம்பர்.

      நீக்கு
    3. தங்களது விரிவான தகவலுக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  7. சிறு வயதில் குளிக்க அம்மா பச்சைபயிறு, பூலாம் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் காய வைத்து அரைத்து வைத்து இருந்தார்கள். பல் தேய்க்க உமிக்கரி மிளகு, உப்பு போட்டு வைத்து இருந்தார்கள், தலைக்கு தேய்த்து குளிக்க சீயக்காய், பூந்தி கொட்டை, பச்சைபயிறு,உலர் ரோஜா இலைகள், செம்பருத்தி இலைகள் எல்லாம் காய வைத்து பொடி .
    வாய்புண் என்றால் தயிர் நல்லெண்ணய் சேர்த்து கொப்பளிக்க சொல்வார்கள்.
    வெந்தயத்தை மோரில் போட்டு விழுங்க சொல்வார்கள்.
    மாதம் ஒரு முறை வேப்பம் கொழுந்து உப்பு வைத்து அரைத்த விழுது விழுங்க வேண்டும்.

    வீட்டு தயாரிப்புகள், எண்ணெய் தேய்த்து குளித்தல் எல்லாம் கெடுதல் என்று விட்டு விட்டு கடையில் விற்கும் சோப், ஷாம்பு, வித விதமான டூத்பேஸ்ட், பூச்சி கொல்லி மருந்து என்று வாங்கி உடலை கெடுத்து கொண்டோம். நாங்களாவது சிறிது காலம் எங்கள் குழந்தைகளுக்கு வளரும் வரை வீட்டில் பொடி தயார் செய்து குளிபாட்டினோம்.
    இப்போது உள்ள குழந்தைகள் மருத்துவர் சொல்வதை கேட்கிறார்கள்.

    மாற்றங்கள் நிகழந்து கொண்டே இருக்கிறது. நவீன கருவிகள் இல்லாமல் இப்போது வாழ முடியவில்லை அவசிய தேவை ஆகி விட்டது.

    வேர்வை வெளியேற தோட்டவேலை, நடைபயிற்சி, வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்.
    டி விட்டமினுக்கு மாத்திரை விழுங்காமல் சூரிய ஒளியை பெற வேண்டும். காலை எழுந்து . இரவு வரை வேலை, வேலை என்று இருப்பவர்கள் விடுமுறை நாளில் செய்யலாம்.

    விலை வாசி உயர்வை தடுக்க முடியாது, எளிமை, சிக்கனம், தேவை அறிந்து பொருள் வாங்குதல். என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், தகுதிக்கு மேல், தேவைக்கு மேல் பொருள் வாங்கி குவித்தலும் பிறருக்கு செய்யும் துரோகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      முன்னோர்கள் நமக்கு கட்டாயப்படுத்தி செயல்பட வைத்த விடயங்கள் அனைத்தும் நமக்கு நன்மையே என்பதை நாம் உணர்ந்து விட்டோம்.

      ஆனால் இன்றைய தலைமுறையினர் என்றுமே உணரமாட்டார்கள்.

      நீக்கு
  8. முன்பு பாத்திரம் கழுவ எரு சாம்பல் இருந்தது, இப்போது விறகு அடுப்பு வரட்டி இல்லையே ! தேங்காய் நார் வேண்டாம் என்று வீட்டு வேலை செய்யும் அம்மாவும் சொல்கிறார்கள். அவர்கள் கேட்கும் பாத்திரம் கழுவும் சோப், வீடு துடைக்க அவர்கள் கேட்கும் திரவம் வாங்கி கொடுக்க வேண்டும். கரி பாத்திரம் இல்லை. அப்படியும் அவர்கள் பல வீடுகளில் வேலை பார்ப்பதால் அவசரம் அவசரமாக பத்து தேய்க்க கப்பி நார் வேண்டும் என்கிறார்கள்.

    ஒட்டாத பாத்திரம் என்று நான்ஸ்டிக் பாத்திரம் வீட்டுகுள் நுழைந்து விட்டது.
    இருப்பு பாத்திரங்களை உபயோகபடுத்த மாட்டேன் என்கிறார்கள்.
    காலம் மாறுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எங்கும் இதேநிலைதான் காலம் மாறுகிறது என்று நாமே சொல்லும் நிலைக்கு கார்ப்பரேட்காரர்கள் மாற்றி விட்டனர்.

      சரவணா‌ ஸ்டோர்ஸ் இந்த தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை ஆயிரம் குளிர்சாதனப்பெட்டி (ஃப்ரிட்ஜி) விற்று இருப்பார்கள் ?

      ஆனால் அவர்கள் வீட்டில் இதுவரையில் கிடையாதாம் காரணமென்ன ? நன்மையை உணர்ந்து வாழ்பவர்கள்.

      நீக்கு
  9. விஞ்ஞான வளர்ச்சி ஆக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். விஞ்ஞான கருவிகளை அளவாக பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை நாம் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலைபேசியாக மட்டுமே உபயோகப்படுத்தும் செல்வந்தர்களும் உண்டு.

      நீக்கு
  10. நீங்கள் சங்கை ஊதிவிட்டீர்கள். ஆனால் நீங்களே இன்று வரை சலவைக்கட்டி, கணினி, செல்போன் போன்றவைகளை விடமுடியால் தவிக்கிறீர்கள். ஆக புலம்புவதால் பிரயோஜனம் இல்லை. DD அவர்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      என்னால் இயன்ற வரையிலும் விஞ்ஞானத்தையும், கலப்படங்களையும் தவிக்கிறேன்.

      நீக்கு
    2. மிகுந்த பாக்டீரியாக்கள் உள்ள இடம் என்று விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள், கணிணி மௌஸ், கீபோர்ட் மற்றும் செல்ஃபோன். இவைகளை உபயோகித்துக்கொண்டு, உடம்பில் ஹமாம் போட்டு என்ன பிரயோசனம்?

      நீக்கு
    3. ஹா.. ஹா.. சரியான கேள்விதான் தமிழரே...

      நீக்கு
  11. அடுத்த தெருவில் மழை நீர் கால்வாய்  என்று ஜெசி பி வைத்து நொண்டியதில் இணையம் கட் ஆகிவிட்டது.  இந்தப் பக்கமே வரமுடியவில்லை.  இப்போதுதான் சரி செய்தார்கள்.  அப்பாடி..  இணைய தொடர்பு மீண்டது.  கணினிக்கு வந்து இதோ..  நானும் என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதைத்தான் நானும் சொல்கிறேன் நம்மை இதிலிருந்து மீள விடமாட்டார்கள்.

      உலக முதலீட்டாளர்களின் பிடியில் நாம் லிட்டில் பூச்சியாகத்தான் வாழமுடியும்.

      பாக்கிஸ்தானில் விஞ்ஞானம் துளியும் நுழையாத காடுகளில் வாழும் மக்கள் சுமார் 150 அகவை வரையில் இளமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இன்று வரையில்...

      நீக்கு
  12. உங்கள் கேள்விகளில் நியாயம் உள்ளது. முன்பு (80களில்) லிம்கா மற்றும் லைஃப்பாய் சோப்பு வாசனை வேறு. அப்போது லிம்கா நன்றாக இருந்தது. லைஃப்பாய் சோப்பும்தான். பிறகு லிம்காவின் சேர்க்கப்படும் அந்த வாசனைப் பொருட்களால் கேன்சர் வருகிறது என்று கண்டுபிடித்து பிறகு சேர்மானப் பொருட்களை மாற்றினார்கள். இதுபோலவே ஜான்சன் அண்ட் ஜான்ஸன் ப்ராடக்ட்ஸும். மைதாவை வைத்து சப்பாத்தி பரோட்டா மற்றும் எல்லாவிதமான உணவுப் பொருட்களும் மக்களிடம் பரவிய பிறகு, அதைச் சாப்பிட்டால் ஏகப்பட்ட வியாதிகள் வரும்னு இப்போ சொல்றாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      கொக்ககோலா, பெப்ஸியால் கெடுதி என்று தெரிந்தும் இன்னும் அதை வாங்கி குடிப்பவர்களை என்ன சொல்வது ?

      நீக்கு
  13. சூரிய வம்சம், சந்திர வம்சம், மௌரிய வம்சம், சாளுக்கிய வம்சம் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்... ஆனால் இப்போதுதான் தங்கள் வாயிலாக புதுமையை வரவேற்கும் "புண்ணாக்கு வம்சம்" என்றும் ஒரு வம்சம் இருப்பதை அறிந்துகொண்டேன்... நன்றி! நன்றி!! நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் இது இந்த நூற்றாண்டில் புதிதாக தோன்றி இருக்கிறது.

      நீக்கு
    2. ஹ... ஹஹா... தங்களின் பதிவில் மட்டுமல்ல... பதிலளிக்கும் கருத்துக்களிலும் கூட நகைச்சுவைகளுக்கு பச்சமில்லை.... அடிபொளி...

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  14. விஞ்ஞானம் கற்றுக்கொடுத்த தீய பழக்கங்களிலிருந்து விடுபட விஞ்ஞானிகள்தான் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

    பயனுள்ள ஆய்வு. பயன்தரும் கருத்துரைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஆம் சரியாக தீர்வு சொன்னீர்கள் அவர்கள்தான் வழிமுறைகளையும் சொல்ல வேண்டும்

      நீக்கு
  15. அறிவியல் வளர்ச்சி, வணிகக் கருவியாகிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உங்கள் மன ஆதங்கம் புரிகிறது. விஞ்ஞான வளர்ச்சி பல நல்லது செய்வதைப் போல் சிலவற்றில் தீயவைகளையும் புகுத்துகிறது. இது பசுமையான அந்தக்காலத்தை தவற விட்ட நம் மனதின் எண்ணங்கள். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இவைகள்தாம் விருப்பமாக உள்ளன. அவர்களோடு சேர்ந்திருக்கும் நாமும் இதன் பழக்க வழக்கத்திற்கு உடன்பட்டு போக வேண்டியதுதான். வேறு வழியில்லை... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      //இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இவைகள்தாம் விருப்பமாக உள்ளன. அவர்களோடு சேர்ந்திருக்கும் நாமும் இதன் பழக்க வழக்கத்திற்கு உடன்பட்டு போக வேண்டியதுதான். வேறு வழியில்லை//

      ஆம் இதுதான் நிதர்சனமான உண்மை

      நீக்கு
  17. ஐயா தங்களின் பதிவு எதார்த்த நிலையை தற்போது சுட்டி காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது சிறந்த செயல் வாழ்த்துக்கள் ஐயா. நோய்க்கு புதிய பெயர்களை வைத்து அதை குணமாக்காமல் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட வைத்து விளம்பரத்தை மூலம் பணம் பண்ணியவர்கள் இனிமேல் இனிவரும் காலங்களில் தங்களைப் போன்று எழுத்து பணி மூல மக்களை இயற்கைக்கு மாற்ற முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ? தங்களது கருத்தும், அதன் ஆழமும் கண்டு மிக்க மகிழ்ச்சி தொடர்ந்தால் நன்று.

      நீக்கு
    2. நீண்ட நாட்களுக்கு பிறகு பிளாக்கிற்கு வந்ததால் தங்களின் எழுத்து தற்போது தான் வாசிக்க முடிகிறது நான் நன்றாக இருக்கிறேன் நண்பரே நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? இனிமேல் நானும் இயற்கை சார்ந்த அறிவுகளை எழுத துவங்குகிறேன் நண்பரே

      நீக்கு
    3. நல்லது தொடர்ந்து எழுதுங்கள் நானும் வருகிறேன்.

      நீக்கு
  18. விஞ்ஞான வளர்ச்சியை ஆக்கத்தை விட அழிவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது வேதனை.

    பதிலளிநீக்கு