நமது முன்னோர்கள் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று சொல்லி வைத்தது
எவ்வளவு உயர்வான அனுபவமொழி. எங்கும், எதிலும், எவரும் துரோகம் இது தவறென்றே உணராத
மனிதர்கள்தான் இப்பொழுது வாழ்கின்றார்கள். யாரையுமே நம்புவதற்கில்லை. கணவனை
மனைவியும், மனைவியை கணவனும் நம்பாமல் பொய்முகத்தோடுதான் இருக்கின்றார்கள். உண்மை
முகங்களை அல்ல, உண்மை முகத்தை பார்ப்பது அரிது.
நல்லவன்கூட துரோகத்தின் பாதிப்பால் தன்னையும் அதிலே இணைத்து கொண்டால்தான்
வாழவே முடியும் என்ற இழிநிலைக்குள் வந்து விட்டான். நல்ல மனிதனை ஏமாளி என்றும்
மேலும் இழிவாக இளிச்சவாயன் என்றே பெயர் சூட்டி விட்டார்கள். நமக்கும்
மற்றொருவருக்கும் பிடிக்கவில்லை என்று வரும். சூழலில் இருவருக்கும் பொதுவானவன்
இரண்டு பக்கமும் பேசாத வார்த்தைகளை கூடுதலாக போட்டுக் கொடுத்து மேலும் பகையை
விரிவுபடுத்தி அவன் ஆதாயம் தேடிக் கொள்கிறான்.
இவனைப்பற்றி அவனிடமும், அவனைப்பற்றி இவனிடமும் சொல்லிக் கொடுக்கும் பொழுது
இருவருமே அவன் சொல்வதை நம்புகின்றார்கள். காரணம் அவன்மீது இவனுக்குள் எரிந்து
கொண்டு இருக்கும் கோபக்கனல். இருவருமே கேட்டுக் கொள்ளப்போவதில்லை இதுதான்
இடைத்தரகரின் பலம். எந்த விசயத்தையும் உடனே சம்பந்தப்பட்டவரிம், அகம்பாவத்தை
கலைந்து பணிவாக இந்த மாதிரி கேள்விப்பட்டேன் நீ சொன்னது உண்மையா ?
உண்மையானால் அவனது பதிலில் தெரிந்து கொள்ள முடியும். இல்லை எனில் சொன்னவரை
காட்டிக் கொடுக்காமல் மன்னிக்கவும் தெரிந்து கொள்ளவே கேட்டேன். என்று சொல்லி
விட்டால் அங்கு சில நல்ல எண்ணங்கள் இருவருக்குமே புரிய தொடங்கும். இதுவே
பகைமைத்தீயை சற்றேனும் அணைக்க வழி வகுக்கும். நான் பல மனிதர்களை பார்த்து விட்டேன்
ஓர் உதவியை நாடும் பொழுது அது கடனுதவியோ, மற்ற எதுவாயினும் எவ்வளவு பணிவு
இருக்கிறது அது முடிந்தவுடன் அவர்களது பேச்சின் தொணி வேறு வகையாகிறது.
நமக்கு துரோகம் செய்தவர்களை ஒதுக்க தொடங்கினால் இறுதி யாத்திரையில் நாம்தான்
சுடுகாட்டுக்கு நடந்து போய் குழியில் படுத்துக் கொள்ள வேண்டிய நிலைவரும். ஆகவே
மனக்காயம் உண்டாக்கியவர்களை, மனதுக்குள் வைத்துக் கொள்வோம். பேசும் பொழுது உதடுகள்
மட்டும் சிரிக்கட்டும் வேறு வழியில்லை. இல்லை எனில் உறவுகள் அனைவரும் நம்மை கை
கொட்டி சிரிக்கும் நிலையில் தனிமரமாய் நிற்போம்.
துரோகம் எங்குதான் இல்லை ? அரசியல்வாதிகள் துரோகம் செய்தாலே நிற்கமுடியும். ஓ.பன்னீர் செல்வத்தை
கட்சிக்கு துரோகம் செய்து விட்டார் என்கின்றார்கள். எடப்பாடியார் சாதாரண ஆளா ? சசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம்
செய்யவில்லையா ?
அதற்காக சசிகலாவை உண்மையின்
சுயரூபம் என்று நான் சொல்ல வருவதாக அர்த்தமில்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள்தான், இந்தக்கட்சி மட்டுமல்ல எல்லாக்கட்சி என்ற குட்டைகளுமே இதேநிலைதான்.
காரணம் அரசியல்வாதிகள் வானிலிருந்து குதித்து வந்த தேவதூதர்கள் அல்ல
நம்மிலிருந்து சென்றவர்கள், நம்மைப் போலத்தானே இருப்பார்கள். ஆகவே நல்ல
அரசியல்வாதிகள் இனியெனும் வேண்டுமெனில் முதலில் நாம் நல் மனிதராக மாறிடல் வேண்டும்
அது இனி சாத்தியமில்லைதான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
ஆகவே நமது பிள்ளைகளையாவது நல்லவர்களாக வளர்க்க இன்றுமுதல் முயற்சிப்போம்.
அப்பொழுது நல்ல ஆட்சியாளர்களால் நமது அடுத்தடுத்த சந்ததிகளாவது நல்ல வாழ்க்கை
வாழட்டும். அதற்கு இன்றே சூழுரைப்போம். இருப்பினும் நமது வழி நேர்மை என்பது நமது
மனசாட்சிக்கு நிச்சயமாக தெரிந்தால் நாம் நாமாகவே வாழ்ந்திடுவோம் பிடித்தவர்கள்
நம்மோடு, இருக்கட்டும் பிடிக்காதவர்கள் மண்ணோடு போகட்டும். வாழ்வது ஒருமுறை அதுவே
நல்லமுறையாக இருக்கட்டும்.
நீ பிறந்ததற்கு அடையாளமாக எதையாவது பதிந்து விட்டுச்செல்
இல்லையேல் உனக்கும் கற்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.
-சுவாமி விவேகானந்தர்
கில்லர்ஜி தேவகோட்டை
Chivas Regal சிவசம்போ-
இன்னா பாஸூ... இதெல்லாம் இன்றைக்கு நடைமுறைக்கு நடக்கிற மாதிரியா இருக்கு ?
-சுவாமி விவேகானந்தர்
இன்னா பாஸூ... இதெல்லாம் இன்றைக்கு நடைமுறைக்கு நடக்கிற மாதிரியா இருக்கு ?
துரோகத்தால் ரொம்ப பாதிக்கபப்ட்டிருக்கிறீர்கள் போல. துரோகங்கள் எங்குதான் இல்லை? சுநலன்க கோலோச்சும் நாள் இது.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி ஆம் மிக நிறைவாக எனக்கு இறைவன் கொடுத்தது துரோகிகளைத்தான்...
நீக்குபிள்ளைகளையாவது நல்லவர்களாக வளர்க்கதான் அப்புதுல் கலாம் குழந்தைகளை அதிகம் நாடினார்.
பதிலளிநீக்குஆம் இருக்கலாம் குழந்தைகளைத்தானே பள்ளிகளில் எண்ணங்களை பாதை மாற்றுகின்றனர்
நீக்குஇறுதி யாத்திரையை விடுங்கள். அப்போது என்ன அடக்கிறது என்று நம்மால் பார்க்க, உணர முடியாது! கவலைபபடவும் முடியாது! ஆனால் அன்றாட யாத்திரைக்கே சில அடஜஸ்ட்மெண்ட்களோடுதான் வாழவேண்டி இருக்கிறது.
பதிலளிநீக்குஇறுதி யாத்திரையை சாதாரணமாக நினைக்காதீர்கள் ஜி.
நீக்குஅது ஆன்மா சங்கமிக்கும் நிகழ்வு உண்மைகளும், பொய்களும் உணரக்கூடிய நாள்.
சுயநலன்தான் துரோகங்களுக்குக் காரணம்.
பதிலளிநீக்குஎன் அப்பா, என்னிடம், செய்நன்றி எப்போதும் மறக்கக்கூடாது என்பார்.
வருக தமிழரே
நீக்குநல்ல வாக்குதான் வாழ்க வளத்துடன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சுயநலன்களை உடன்பிறப்பாக கொண்ட துரோகங்களை பற்றிய நல்ல அலசல். அவரவர் மனசாட்சிக்கு பொய்யுரைக்க கூடாது என்ற நல்லெண்ணம் எப்போது உண்டாகிறதோ, அப்போதுதான் இந்த மாதிரி ஒரு மனிதர் தம்மை நெருங்கி சார்ந்துள்ள மற்றொருவருக்கோ, இல்லை. பிறருக்கோ எந்தவொரு துரோகமும் செய்ய கூடாது என்ற எண்ணங்களுடன் வாழ்வர். ஆனால், மனசாட்சிப்படி, அதற்கு பயந்து கொண்டு யார் நடக்கிறார்கள்..? தன் மனம் போனபடிக்குதானே நடக்கிறார்கள்.. அவர்களுக்கு இப்படியான துரோகங்கள் ஒரு பொருட்டேயில்லை. கனியும் காலம் சொல்லும் பதிலை எதிர்பார்த்தபடி எல்லாம் விதியென்று நாமும் நடந்து கொண்டுதானிருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குகில்லர்ஜி இன மனப் புண் தெரிகிறது. அடிபட்டதால் வரும் விரக்தி.
பதிலளிநீக்குநமக்கு ஒத்துவரலை என்றால் ஒதுங்கி இருப்பது நல்லது. நம் பல தத்துவங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண். இன்னா செய்தாரை .....என்று நல்லது செய்யச் சொல்லும் குறள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு எனும் மற்றொரு மொழி. பலனை எதிர்பார்க்காதே. தாமரை இலை தண்ணீர் போல் வாழ வேண்டும், உரிமைக்குப் போராடு....இப்படி பல. நம் சாய்ஸ்! நாம் எப்படி வாழ வேண்டும் என்ற பாதை நாம வகுத்துக் கொள்வது. ந்மக்கு இதில் எது ஒத்துவரும் என்பது.
சி/சைக்காலஜி ல ஒரு பாடம் சொல்லுவாங்க...நான் ஓகே நீயும் ஓகே என்றால் சுமூகமான உறவு இருக்கும். நான் ஓகே நீ ஓகே இல்லை என்று சொல்பவர்களிடம் யோசிக்க வேண்டும். சுயநலம் துரோகம் என்று தெரியும் போது சற்று விலகி இருப்பதே நல்லது. நம்மைச் சுற்றி நல்லவங்க இருக்காங்க. அவங்களைக் கண்டு அவங்களோடு பழகுவது நல்லது ...ஓரிருவர் இருந்தாலும் போதும்.
நம் குழந்தைகளை அடிப்படை நல்ல விஷயங்களை 6, 7 வயதிற்குள் போட்டுவிட வேண்டும். 12 வயது வரைதான். அதன் பின் வயதாகும் போது அட்வைஸ் போகாது. நட்புடன் நலல்தைப் பகிர்தல். நல்லபடி வளர்க்கலாம் எது சரி என்று வித்தியாசப்படுத்தலை விதைத்தாலே போதும்
கீதா
வருக நான் விலகித்தான் போகிறேன்.
நீக்குதங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நம்ம நாட்டு பேடிப் பயலை என்ன செய்வது...? அதை தொடரும்.... முக்கியமாக மாமீஸ்களை என்ன செய்வது...?
பதிலளிநீக்குவாங்க ஜி எல்லா அரசியல்வியாதிகளும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள்.
நீக்குபதிவு மிக அருமை.
பதிலளிநீக்குகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது உண்மைதான்.
அங்கும், இங்கும் ஏதாவது பேசி ஆதயாம் தேடும் உறவுகள் உண்டு.
உள் அன்போடு நேசிக்கும் நட்புகளும், சொந்தங்களும் உண்டு.
கொடுத்தால் ஒரு பேச்சு, கொடுக்கவில்லையென்றால் ஒரு பேச்சு எனும் உறவுகளும் உண்டு.
நீங்கள் சொல்வது போல நாலு பேர் வேண்டும், நல்லது கெட்டதற்கு என்று சகித்து கொண்டு, விட்டுக் கொடுத்து பொறுமையாக போக வேண்டி இருப்பது உண்மைதான்.
இன்னல் புரிவோர் , எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருந்தால் அவர்களும் நல் வாழ்வு பெற கருணையோடு வாழ்த்த சொல்கிறார் எங்கள் குரு.
அப்படித்தான் வாழ்த்தி கொண்டு இருக்கிறேன்.
நான் எனது வாழ்நாளில் . யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்,
துன்ப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்று இரண்டொழுக்கப் பண்பாடு சொல்லி கொடுத்து இருக்கிறார். அதையும் கூடுமானவரை பின் பற்றுகிறேன்.
அப்படியும் என் மனதை வருந்த செய்பவர்கள் இருக்கிறார்கள்.
இறைவனிடம் பொறுமையை கொடு என்று வேண்டிக் கொள்வேன்.
சுவாமி விவேகானந்தர் பொன் மொழி நன்றாக இருக்கிறது.
நல்ல முறையாக வாழ்வோம், நல்லதே நடக்கட்டும்.
வருக சகோ
நீக்குதங்களது விரிவான கருத்தும், ஆறுதலும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மிக்க நன்றி.
இன்னா பா...
பதிலளிநீக்குஇன்னிக்கு ஒத்து வர மாதிரியா
எல்லாம்
கீது ?..
அவ்ளோதான்.. போய்க்கினே இருப்போம்!..
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குநல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் காத்திருக்கின்றன. சிறிது தாமதமாக வந்தாலும், அவை நிச்சயம் வந்தே தீரும்!
பதிலளிநீக்குவருக கவிஞரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குசிந்திக்க வைக்கும் பதிவு.
பதிலளிநீக்குமுனைவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி
நீக்குநாம் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருக்க முற்படுவோம்.
பதிலளிநீக்குகாயப்படுத்து வோரிடம் கோபம் கொள்ளாது சற்று விலகி நடப்போம்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு