தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 21, 2023

நான் தமிழன்டா...

னது தோட்டத்து வயலில்
வண்ணத்துப்பூச்சி பூவாய்
என்னைப் பார்த்து சிரித்தது
அழகு ஓவியமாய்...- நான்
நீ மட்டும் பல வண்ணங்களில்
எப்படி பிறக்கிறாய் ? என்றேன்
நாங்கள் பாக்கியசாலிகள்.
மேலும் என்னை கேட்டது
நீ ஏன் இப்படி கருப்பாக
இருக்கிறாய் ? என்று நான்
சொன்னேன் கடும் வெயிலில்
விவசாயத்தொழில் செய்கிறேன்
இங்கு பந்தல் போட்டு செய்ய
முடியாதல்லவா ஆகவேதான்
கருப்பு தங்கமாக இருக்கிறேன்.
மீண்டும் கேட்டது  நானும்கூட
தினமும் உணவுக்கு வெயிலில்
அலையவில்லையா ? என்று
சொல்லி சிரித்தத இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
சாலையில் பொதியோடு...
போய்க்கொண்டு இருந்தது
நான் கேட்டேன் ஏ... கழுதை
உனக்கு இவைகள் கனமாக
இல்லையா ? என்று அதற்கு
அது சொன்னது மனிதர்கள்
எல்லோரும் தும்பைப்
பூவைப்போல் இருக்க
ஆசைப்படுகின்றீர்களே...
அதனால்தான் எங்களது
வாழ்க்கை பொதியோடு
போகிறதென்று இது
நல்லதுதானே என்றேன்
கேட்ட கழுதை சற்றே
விசமமாய் சிரித்தது
நான் கோபமானேன்
எதற்கு சிரிக்கிறாய் ?
ஆனால் மனசு அப்படி
இல்லையே என்றது இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
கோயில் மண்டபத்தில்
ஆண்டாள் என்ற யானை
பனை ஓலைகளால்
தன்னை விசிறிக் கொண்டு
நின்றது அதனிடம் நான்
கேட்டேன் ஆண்டாள்
உனக்கு இந்த வாழ்க்கை
பிடித்து இருக்கிறதா ?
என்று... என்ன செய்வது
என் தலையெழுத்து என்றது
ஓ... உங்களுக்கும் இதில்
நம்பிக்கை இருக்கிறதா ?
என்றேன்... மற்றவைகளை
போலில்லாமல் என்றைக்கு
தும்பிக்கையோடு வந்தோமோ
அன்றிலிருந்து சோலந்தூர்
சோசியர் சோனைமுத்து
எங்களையும் இப்படி சொல்ல
வைத்து விட்டார். இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
டைவேளையில் அந்த
சர்க்கஸ் கூடாரத்தின் ஓரமாய்
ஒதுங்கினேன் உறுமல் சத்தம்
கேட்டு மறுபுறம் பார்த்தேன்
அங்கே கூண்டில் சிங்கம்
உலாவிக் கொண்டு இருந்தது
நான் அதனிடம் கேட்டேன்.
உனக்கு சரியான உணவு
கிடைக்கிறதா ? என்று அதற்கு
ஏன் நீ உன்னை தரப்போறியா ?
என்றதும் எனக்கு தூக்கி வாரிப்
போட்டது... என்ன நீ உனக்கு
உதவ வந்தவனை கேட்கிறாய் ?
என்னை அமைதியாக பார்த்தது
காட்டுக்கே ராஜாவான உன்னை
இப்படி பார்ப்பது மனசு கஷ்டமாக
இருக்கிறது என்றேன். காட்டில்
எப்படி இருந்த நான் இப்படி
ஆயிட்டேன் என்றது இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
ன்று காந்தி ஜெயந்தி
விடுமுறை தினத்தில்
காட்டுக்குள் சென்றேன்
நரியொன்று வந்தது நான்
கவச உடையுடன் கையில்
துப்பாக்கி வலைக்கம்பிகளால்
பின்னப்பட்ட ஜீப்பில் இருக்க
என்மேல் பாய முடியாமல்
நின்றது என்ன நரியாரே
யோசனை ? என்று கேட்டேன்.
சுட்டு விடாதே என் குட்டிகளை
நான்தான் காப்பாற்ற வேண்டும்.
தந்திரம் செய்து என்னை கடிக்கப்
பார்க்கிறாயா ? என்றேன் உங்களது
அரசியல்வாதிகளை விடவா நம்ப
வைத்து கழுத்தறுக்கப் போகிறேன் ?  
என்றது செருப்பை மனிதச்
சாணியில் தேய்த்து அடித்தது
போலிருந்தது எனக்கு இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
 
ந்த முட்டுச்சந்தில் ஒதுங்கப்
போனேன். குட்டிச்சுவற்றில்
ஒட்டியிருந்த நமீதாவை
நாவால் துழாவி ஈரப்படுத்தி
பக்குவமாக உரித்து உணவாக்கி
கொண்டு நின்றது அந்த மாடு
ஏய் மாடே எதற்கு சுவரொட்டியை
உண்கிறாய் வயலில் போய்
நெற்கதிர், புல் இவைகளை
உண்ணாமல் இப்படி விளம்பரம்
செய்யும் சுவரொட்டிகளை
உண்ணலாமா ? இது தவறு
என்றேன். என்னை மேலும்
கீழுமாக பார்த்த மாடு, ஏண்டா
நாதாரிப்பயல்களா வயல்களை
பூராம் ப்ளாட் போட்டீங்களேடா
நாங்க மசுத்தையா திங்கிற-தூ
காசுக்கு பீ திங்கிறியலேடா...
எனது மானம் போனது. இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
ந்த ஆற்றில் கழுவப்போனேன்
அங்கு நின்ற பன்றி என்னைப்
பார்த்து சிரிப்பது போலிருந்தது
ஏன் சிரிக்கிறாய் ? என்று கேட்டேன்
டிஜிடல் இந்தியா என்று மோடிஜி
சொல்கிறார் நீ இப்பவும்
பொதுவெளியில் கழுவுகிறாயே
இது குக்கிராமம்தானே என்றேன்.
குக்கிராமம்தான் நகரத்துக்கு
உணவு வழங்குகிறது. இது
வளர வேண்டாமா ? என்றும்
கேட்டது. இதை வளர விட்டால்
உங்களுக்கு உணவு கிடைக்காது
ஆகவேதான். ஆறுகளை காத்து
வருகிறோம் என்றேன். இல்லை
என்றால் இதையும் ப்ளாட்
போட்டு விற்று விடுவீர்கள்
போலும் என்றதும் எனக்கு
அசிங்கமாக போனது இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
ந்தப் புதருக்குள் தெரியாமல்
காலை வைத்ததுதான் தாமதம்
சட்டென்று என்னை கொத்தி
விட்டது அந்தப் பாம்பு. உடன்
நான் அடித்து விடுவேனோ...
என்ற பயத்தில் நகந்து செல்ல
நான் வலியோடு கேட்டேன்
ஏ... பாம்பே எங்கு செல்கிறாய் ?
என்று கேட்டேன் நான் மும்பை
செல்கிறேன் என்று நக்கலடித்தது
என்னைக் கொத்தலாமா ? நீ
நல்லபாம்பு இல்லையா ? என்னை
விசத்தை எடுத்து காப்பாற்று
என்றும் கேட்டேன். என்னை
ஏளனத்துடன் சிரித்தது எதற்கு
சிரிக்கிறாய் ? என்றேன் கோபமாய்
முட்டாப்பயல்களா... நீங்கதானே
எனக்கு நல்ல பெயர் வச்சீங்க...
என்று கேட்டு சென்றது இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
 
நான் மொட்டை மாடியில் நின்று
எங்கள் அய்யா ஞானி ஸ்ரீபூவுவுக்கு
விரதமிருந்து காகத்துக்கு உணவு
வைத்து கா... கா... கா... என்றேன்
சுவற்றில் வந்து நின்ற காகம்
சற்றே யோசித்தது உணவை
எடுக்கவில்லை நான் கேட்டேன்
காகமே எதற்கு உணவை உண்ண
யோசிக்கிறாய் ? நான் எதற்கு
உண்ண வேண்டும் ? என்று கேட்டது.
என்ன கேள்வி இது ? ஆண்டாண்டு
காலமாக நீங்கள் உண்டால்தானே
எங்களால் உண்ண முடியும். வா
வந்து உண். உன் எச்சில் பட்ட
பிறகுதான் எங்களுக்கு உணவு.
அப்படீனாக்கா முந்தாநாள் ரெண்டு
வடகத்தை நான் எடுத்ததற்கு
உன் பாட்டி கல்லைக் கொண்டு
எறியலாமா ? என்றது இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
 
றங்கி கொண்டு இருந்த
எனக்கு கொக்கரக்கோ என்ற
சத்தம் கேட்டு விழித்து
விட்டேன். மறு தூக்கம்
வருவதற்கு சற்றே கடினமாக
இருந்தது அலைபேசியில்
நேரம் பார்த்தேன் நான்கரை
எழுந்து கழிவறை சென்றேன்
வாசலில் நின்ற சேவலைப்
பார்த்ததும். கோபம் வந்து
கேட்டேன். ஏ... சேவலே
உனக்கு உறக்கம் வரவில்லை
என்பதற்காக எதற்கு மக்களை
இப்படி அதிகாலையில் உசுப்பி
விடுகிறாய் ? இது எனது கடமை
என்றது அமெரிக்காவிலும் இப்படி
கத்துவியா ? என்று கேட்டேன்
நான் தமிழன்டா ஆங்கிலத்தில் கத்த
மாட்டேன் போடா என்றது. இதற்கு
நான் என்ன சொல்வது ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி

Share this post with your FRIENDS…

32 கருத்துகள்:

  1. ஏகப்பட்ட நான் என்ன சொல்வதுகள்..   ஒரே என்றதில் எப்படி இவ்வளவு கேள்விகளை தொடுத்தீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. யானையின் நாட்டிய நடை மிக மிக அழகு.

    பதிலளிநீக்கு
  3. யானையின் நடையும் பாடலும் அருமை.

    இருந்தாலும் அதன் இயல்பை, வாழ்க்கை முறையை மாற்றுகிறோமே... தவறல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மனிதனின் சந்தோஷத்திற்காக யானையை மட்டுமா வதைத்தான் ?

      நிறைய மிருகங்களின் வாழ்க்கையை நசுக்கினான்.

      நீக்கு
  4. கேள்வியின் நாயகனே... உங்கள் கேள்விகளுக்குப் பதிலேதையா ன்னு சொல்லத் தோணுது.

    இரண்டு பதிவுகளாக இருந்திருக்க வேண்டியவைகளை ஒரே பதிவாக ஆக்கிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே உங்களுக்கு நீளமான பதிவுகள் பிடிக்குமே...

      நீக்கு
  5. வித்தியாசமான எண்ணங்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
  6. ஹாஹாஹாஹா கில்லர்ஜி கேள்விக்கணைகள்! எல்லாமே செம கேள்விகள். காக்கா, நரி, வண்ணத்துப்பூச்சி சூப்பர் . பாருங்க வண்ணத்துப்பூச்சி வெயில்லதான் அலைகிறது ஆனா அதுக்கான கலர் அப்படியே இருக்கு இல்லையா!! படைப்பின் ரகசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  7. யானை ஆஹா என்ன அழகான ஒயிலான நடை! அதுவும் தலையை இங்கும் அங்கும் அழகா ஆட்டி நடக்குது பாருங்க!!!! ரசித்துப் பார்த்தேன் பாடலையும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கோழி - ஹாஹாஹாஹா....எங்க போனாலும் எனக்கு ஒரே மொழிதானேன்னு !!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. முதல் கேள்விக்கான பதில் "வண்ணத்துப்பூச்சி" தன் இரு இறக்கைகளால் விசிறிக்கொள்வதால் வெயிலின் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை என்பதால் கறுக்காமல் இருக்கிறது என நினைக்கிறேன்.... அடுத்தடுத்த கேள்விகளுக்கு யோசித்து பதில் சொல்கிறேன்...
    காணொளி கண்டேன்... "நீ நடந்தால் நடையழகு... அழகு" பாடல் நினைவிற்கு வந்து போனது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்து சரியாக இருக்கும்.

      நீக்கு
  10. ம்ம்ம்ம், மிருகங்கள், பறவைகள் எல்லாவற்றையுமே மனிதன் புண்படுத்தி வருகிறான். என்ன செய்ய முடியுது நம்மால்? வேடிக்கை தான் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. எதற்கும் பதில் செல்வதற்கு இயலாது..

    அருமை..

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வருகைக்கும், காணொளி கண்டமைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பறவை, மிருகங்களிடையேயிருந்து புறப்பட்ட நல்ல கேள்விகள். எதற்கும் நம்மால் பதில் தர இயலாது? பதிவை ரசித்து எழுதியுள்ளீர்கள். நானும் படித்து ரசித்தேன். இந்த மாதிரியெல்லாம் யோசித்து அருமையாக எழுத தங்கள் ஒருவரால்தான் இயலும். மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியும் கண்டேன். யானையின் நளினமான நடை நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
    2. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கும், காணொளி கண்டமைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  14. கேள்விகள் எல்லாம் நல்ல கேள்விகள்.
    கேள்வி கவிதை அருமை.
    காணொளி அருமை. பாடலும், யானையின் நடனமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  15. நீண்ட பதிவாக இருந்தாலும் அர்த்தமுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. கேள்விகள் நிஜம்.

    இங்கு காட்டு மிருகங்கள் சில நாட்டுக்குள் வருவதாக காட்டையே எரித்து மரங்களும் மிருகங்களும் எரிந்ததுதான் மிச்சம். அறிவான சுயநல ஜனங்கள் என்னத்தை சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு