தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 05, 2023

இலுப்பக்குடி சாலையில்...


ன்றொருநாள் இலுப்பக்குடி சாலையில் எனது மகிழுந்தில் ஜலந்தரில் ஒரு நண்பரது திருமணத்திற்கு போய்க் கொண்டு இருந்தேன். உசிலம்பட்டி பிரிவு பாலத்தின் கீழே போனபோது... எனது முன்புறம் வெள்ளை நிறத்தில் ஒரு MARUTI SUZUKI SWIFT மகிழுந்து என்னைக் கடந்து போனது. அதில் ஒரு பத்து வயது குழந்தையை கடத்துவது போல் தெரிந்தது அதாவது குழந்தையை அடிப்பது போலிருந்தது. இதைக் கண்டதும் எனக்கு உடன் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.
 
உடன் அந்த மகிழுந்தின் எண்களை பார்த்தேன் PB10 EU1300 உடன் எனது அலைபேசியில் காவல்துறையின் அவசர எண் நூறுக்கு அழைத்தேன் எடுத்தவர் மலையாளத்தில் பேசிட, நானும் மலையாளத்தில் இந்த மாதிரி மாருதி வண்டி இந்த, இந்த மாதிரி என்று மாருதி வண்டியின் எண்ணும் சொல்லி முடித்ததும் நீங்கள் பின்னேலேயே விரட்டி போங்கள் நாங்கள் உடன் வருகிறோம் என்று சொல்லி வைத்தனர். நானும் உடனே அந்த வண்டியை பின் தொடர்ந்து செல்ல அவர்கள் என்னை முன் கடந்தனர்.
 
சற்று நேரத்தில் காவல்துறையின் ஜீப் என்னிடம் கையைக் காண்பித்து விட்டு அந்த வண்டியை விரட்டி பிடித்து முன்புறம் சென்று நிறுத்திட அந்த வண்டியும் நின்றது. அதன் பின்னே நானும் நிறுத்தினேன். போலீஸார் அவர்களிடம் கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே பார்க்க, உள்ளே முன்புறத்தில் கணவர் ஓட்டுனர் இருக்கையில் இருக்க, பக்கத்தில் மனைவியும், பின்புற இருக்கையில் இரண்டு குழந்தைகள் மய்யமாக ஒரு ஆளுயரப் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அந்த குடும்பத்திடம் எங்கிருந்து வருகிறீர்கள் ? என்று போலீஸார் கேட்க, அவர்கள் ஆந்திராவிலிருந்து வந்து இருப்பதாக தெலுங்கில் மாட்லாடினார்கள். வண்டி பஞ்சாப் ரெஜிஸ்ட்ரேஷனாக இருக்கிறதே ? என்று கேட்க, எங்க நைனா இங்குதான் இருக்கிறார். அவரோட வண்டி என்று, ஆர்.சி.புக்கையும் தனது ஆந்திரா ஓட்டுனர் உரிம அட்டையையும் எடுத்து காண்பிக்க, டிக்கியையும் திறந்து பார்த்த போலீஸ் அவர்களை அனுப்பி விட்டு, என்னை முறைத்து பார்த்து விட்டு எனது ஐயிட்டங்களை கேட்டனர்.
 
நான் முழித்துக் கொண்டே எடுத்துக் கொடுத்தேன் வாங்கி நான்காயிரம் ரூபாய் மட்டும் அபராதம் விதித்து பேப்பரை கொடுத்து நாளை மறுதினத்துக்குள் கட்டவேண்டும் இல்லாவிட்டால் பஞ்சாப் சுங்கச்சாவடியை தாண்ட முடியாது என்று எச்சரித்து விட்டு ஊருக்கு போய் கண் மருத்துவரை உடனே பாரு என்று சொல்லிச் சென்றனர்.
 
அசடு வழிந்து தலையாட்டினேன் மகிழுந்தில் உட்கார்ந்து முன்புறக் கண்ணாடியை பார்த்தேன் அது, இது உனக்கு தேவையா ? என்று கேட்பது போலிருந்தது. திருமணத்துக்கு சென்று சாப்பிடும் முன்பே மொய் எழுதியதை நான் யாரிடம் சொல்ல.... ?
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
பஞ்சாபி போலீஸ் மலையாளத்திலும், தெலுங்கிலும் பேசுனாங்களா... என்னையா இது காலக்கொடுமை ?
 
காணொளி

Share this post with your FRIENDS…

38 கருத்துகள்:

  1. கில்லர்ஜி 'சில நேரங்களில்' ரொம்பவே அப்பாவியாக இருப்பார்னு தெரியுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதுதான் உண்மையான உண்மை.

      நீக்கு
  2. வாகிக்கும் போதே தெரிந்தது....இதுகில்லர்ஜிக்குத் தேவையா என்று...பேசாம போயிருக்கலாம்ல....ஹாஹாஹாஹா.. சிலப்போ நாம ஏதோ நல்லது அருன்செயல், வீரச்செயல் செய்யறோம் என்று செய்கிறோம் ஆனால் கடைசியில் அது நமக்கு பல்பு வைக்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வழியில் போவதை விழியால் கண்டதால் வரும் பலிகள்.

      நீக்கு
    2. கீதா ரங்கன்... கர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  3. அது சரி ஜலந்தர் வரை ஓட்டியா போனீங்க? இலுப்பைக் குடிச் சாலை உங்கஊராச்சே!!! இல்லை விமான நிலையம் போனீங்களோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. முதல் கருத்துரையில் எழுத்துப் பிழை நேர்ந்ததால்(ர்-ன்) அதை நீக்கியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  5. ஆஅனால் இது புலி வரும் கதை போன்றும் ஆவதுண்டு....போலீசும் இப்படி நிறைய அழைப்புகள் கேட்டு அலுத்துப் போய்...உண்மையான சம்பவம் சொல்லப்பட்டாலும்..இது சும்மா வீணன் யாரோ செய்யறாங்க என்பது போல் அசட்டையாக இருப்பதும் நடக்கும் என்று தோன்றுகிறது அதனால்தான் நிறைய கடத்தல்கள்.

    அது போல உங்களுக்கும் இனி உண்மையான நிகழ்வைப் பார்த்தாலும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்து அழைப்பதற்குத் தயக்கம் வரலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அனுபமே நம்மை செதுக்குகிறது.
      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. /// அனுபவமே நம்மை செதுக்குகிறது... ///

    உண்மை தான்..
    ஆனாலும் என்ன..
    ரொம்பவே செதுக்கி விட்டது..

    பதிலளிநீக்கு
  7. 4000 ரூ ஒரு நல்ல காரியத்துக்குச் செலவழித்திருக்கிறீர்கள். உண்மையாகவே குழந்தைக் கடத்தலாயிருந்தால்? எண்ணத்திற்கும் அதற்கான முயற்சிக்கும்தான் கர்மபலன். 4000 ரூ என்னைப்பொறுத்தவரையில் உங்கள் இன்வஸ்ட்மென்ட். உங்கள் கணக்கில் வரவாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. நீங்களே காவல்துறை செய்த வேலையை செய்திருக்கலாம்...

    மீசையை பார்த்தவுடன், இனிமேல் குழந்தையை அடிக்கவே மாட்டார்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இப்படியும் வழி முறைகள் இருக்கோ....

      நீக்கு
  9. ஜலந்தருக்குப் போக இலுப்பைக்குடி வழி எப்படி வந்தது? அதும் தேவகோட்டைக்கு பக்கம் இல்லாமல் உசிலம்பட்டி பக்கம் இருக்கிறதாம். பைன் என்ன காரணத்திற்கு என்று கூறவில்லை. சரியான கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அதானே உங்களிடம் கதை விடமுடியுமா ?

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவை படித்தவுடன் மனதுக்கு வேதனையாக உள்ளது. இதைதான் "கண்ணால் காண்பது பொய். தீர விசாரிப்பதே மெய்." என சொல்கிறார்கள் போலும்..

    அன்று நீங்கள் நல்ல எண்ணத்துடன் விரைவாக செயல்பட்டாலும், என்னவோ அன்று காவல் துறைக்கு உங்களால் ஆதாயம் என்ற விதி உள்ளது போலும்.

    /திருமணத்திற்கு செல்வதற்கு முன்பே மொய்/ என நீங்கள் நகைச்சுவையுடன் அதை ஏற்றுக் கொண்டாலும், உங்கள் அனுபவத்தைப் பார்த்து எங்கள் மனது வேதனையுறுகிறது.

    காணொளி கண்டேன். அந்த பஞ்சாப்காரர் தமிழ் பாடல் வரிகளை அழகாகப் பாடுகிறார். ரசித்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      வருவதும், போவதும் சிதாரபுத்திரன் கணக்கு.

      காணொளி கண்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  11. வேலியில் போன ஓனானை எதுக்குள்ளயோ விட்ட கதை அருமை சார்.

    பதிலளிநீக்கு
  12. குழந்தையை காப்பாற்ற நினைத்த மனம் நல்ல மனம்.
    குழந்தைகள் கரடி பொம்மையை அடித்து விளையாடி போய் கொண்டு இருந்தது உங்களுக்கு குழந்தையை அடிப்பது போல தெரிந்ததா?
    போகட்டும் உதவ நினைத்த உங்களுக்கு அபராதம் வந்து சேர்ந்ததே! உரிய ஆவணங்கள் எடுத்து வைத்து கொள்ளவில்லையா? அல்லது தவறாக அவர்களை அழைத்தற்கு அபராதமா?
    அனுபவம் நமக்கு பாடம் ஆகிறது.

    காணொளி அருமை.பஞ்சாபி நன்றாக தமிழ் பாடல் பாடுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தவறாக அழைத்ததற்கும், ஆவணத்தில் ஒன்று காப்பியாக இருந்ததும் காரணம்

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  13. நண்பரே நான்காயிரம் ஏன் வசூலித்தார்கள் என்பதை சொல்லி இருந்தால் மற்றவர்கள் பயணிக்கும் போது கவனமாக செல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஆவணம் காப்பியாக இருந்ததே காரணம்.

      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. உங்கள் கற்பனையைப் படித்தபோதே புரிந்து விட்டது, என்ன நடந்திருக்கும் என்று.  அதை விடுங்கள், அவர் என்ன நிஜ சிங்ஜியா இல்லை டூப்பா?  என்ன இவ்வளவு அருமையாக பாடுகிறார்?  எனக்கு வாட்ஸாப்பில் அனுப்புங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதில் கற்பனையும் பகுதி இருக்கிறது.

      காணொளி அனுப்பி வைக்கிறேன் ஜி

      நீக்கு
  15. ஆனாலும்... உங்கள் கண்களை முறையாக பரிசோதிக்காத குற்றத்திற்கு 4000 அபராதம் விதித்தது கொஞ்சம் அதிகம்தான்....
    இனியாவது அசட்டையாக இருக்காமல் கண், காது, மூக்கு முதற்கொண்டு அனைத்து உறுப்புகளையும் காலாகாலத்தில் முறையாக பரிசோதிக்கவும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே செய்யலாம் அதற்கு 8000 ரூபாய் செலவு ஆகுமே...

      நீக்கு
  16. இலுப்பக்குடி என்கிறீர்கள், ஜலந்தர் என்கிறீர்கள்.. உங்கள் நோக்கம் நல்லது. அதற்கு கொடுத்த விலை கொஞ்சம் அதிகம்தான், என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் இலுப்பக்குடியிலிருந்து(ம்) ஜலந்தர் போகலாம்தானே ?

      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. திருமணத்திற்கு முன்பே மொய்..வேதனைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. உதவப் போய் அபராதம் என்பது வேதனைதான்.

    பதிலளிநீக்கு