தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 16, 2016

பஞ்சமில்லை...


எங்கள் நாட்டில், கட்சிகளுக்கு பஞ்சமில்லை...
பட்டினிச்சாவின் காட்சிகளுக்கும், பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், அரசியல்வாதிகளுக்கு பஞ்சமில்லை...
இலவச அரிசியை, நம்பி வாழ்பவர்களுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், கோடிகளுக்கு பஞ்சமில்லை...
தெருக்கோடியிலேயே, வாழ்பவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், கொடிகளுக்கு பஞ்சமில்லை...
அதை கட்டும்போது, அடிதடிகளுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், தேர்தல்களுக்கு பஞ்சமில்லை...
கோயில்களில், தேர் தள்ளுபவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், நடிகர்களுக்கு பஞ்சமில்லை...
நாடிசோதிடரை, நம்புவோருக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், அறப்பால், வெண்பால்களுக்கு பஞ்சமில்லை...
கட்டவுட்டிற்கு, பால்அபிஷேகம் செய்பவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், கோயில்களுக்கு பஞ்சமில்லை...
நடிகைகளுக்கு, கோயில் கட்டுவோருக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், SWISS வாடிக்கையாளர்களுக்கு பஞ்சமில்லை...
வேடிக்கை காட்டியே, வாழ்பவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், கள்ள நோட்டுகளுக்கு பஞ்சமில்லை...
கள்ள ஓட்டு, வாங்கியே ஜெயித்தவர்களுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், திறமையான கலைகளுக்கு பஞ்சமில்லை...
நடு ரோட்டில், தலைவர் சிலைகளுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், குடிகாரர்களுக்கு பஞ்சமில்லை...
அடுத்தவன் குடியை, கெடுப்பவனுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், வர-தட்சிணைகளுக்கு பஞ்சமில்லை...
வரன்-களுக்காக, காத்திருப்போருக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், T.V. களுக்கு பஞ்சமில்லை...
வீட்டில், கரண்டே இல்லாதவர்களுக்கும், பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், காதலுக்கு பஞ்சமில்லை...
அதனால், மோதல்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், திருமணங்களுக்கு பஞ்சமில்லை...
நாள்தோறும், விவாகரத்துகளுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், நோயாளிகளுக்கு பஞ்சமில்லை...
அதனால், மருத்துவக் கல்லூரிகளுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், சண்டைகளுக்கு பஞ்சமில்லை...
அதனால், சட்டக் கல்லூரிகளுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், பிச்சைக்காரர்களுக்கு பஞ்சமில்லை...
அவர்களுக்கு, பிச்சை போடுபவர்களுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், அனாதை குழந்தைகளுக்கு பஞ்சமில்லை...
அவர்களை, ஆதரிப்பவர்களுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், தொலைபேசிகளுக்கு பஞ்சமில்லை...
அதனால், விலைவாசி ஏற்றத்திற்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், போலி ஆவணங்களுக்கு பஞ்சமில்லை...
அதனால், போலி மனிதர்களுக்கும் பஞ்சமில்லை...

எங்கள் நாட்டில், மக்களுக்கு பஞ்சமில்லை...
அதில், மக்குகளுக்கும் பஞ்சமில்லை...
எங்கள் நாட்டில், பஞ்சமில்லை, பஞ்சமில்லை
பஞ்சமென்பதில்லையே.....

குறிப்பு – இன்னும் எழுத என்னுள் வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை, இருப்பினும் நான் ஆஃபீஸுக்கு போகணும் அப்புறமாக வர்றேன் வெட்கப்பட்ட குற்ற உணர்வுடன் - கில்லர்ஜி

58 கருத்துகள்:

  1. பஞ்சமில்லா பெருவாழ்வு வாழ்வது நல்லது.
    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோ

      நீக்கு
  2. உங்களின் சிந்தனைக்கும், கற்பனைக்கும் பஞ்சமில்லை. இப்பதிவைப் பார்த்ததும் உங்களுக்கு வரும் பின்னூட்டங்ளுக்கும் பஞ்சமில்லை என்றே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வார்த்தை பலிக்கட்டும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. அப்போ இங்கே எதுக்குத்தான் பஞ்சம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே..
      தண்ணீர்ப்பஞ்சம்,
      உணவுப்பஞ்சம்,
      விவசாய நிலங்களுக்கு பஞ்சம்,
      விவசாய வேலைக்கு ஆட்கள் பஞ்சம்,
      நியாயமான வாக்காளர்களுக்கு பஞ்சம்,
      அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளுக்கு பஞ்சம், திரைப்படங்களில் கதைக்கு பஞ்சம்,
      நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடும் உண்மையான வீர்ர்களுக்கு பஞ்சம்
      (ஐ.பி.எல் அடிகளை கவனித்து இருப்பீர்களே... மாற்றம் தெரிகின்றதா ?)

      நீக்கு
  4. நம் நாட்டில் எதற்கும் பஞ்சமில்லை ஆனால் பஞ்சத்தை தீர்ப்பதற்கு தான் இங்கு பஞ்சம் ஐயா.அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையான வார்த்தை சொன்னீர்கள் நன்றி

      நீக்கு
  5. பஞ்சமில்லை... பஞ்சமில்லை...
    நல்ல அரசியல்வாதிக்கு மட்டுமே பஞ்சம்...
    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  6. நீங்க சொன்ன பஞ்சமில்லை
    எல்லாம் சரி தான் - நாட்டில
    சாகத் துடிக்கும் மக்களைக் காக்க
    உதவ வரும் தலைவர்களுக்கு
    தமிழ் நாட்டில பஞ்சமிருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நல்ல தலைவர்களுக்கு பஞ்சமே....

      நீக்கு
  7. அச்சமில்லை அச்சமில்லை என்பதற்கு எதிர்பாட்டு பாடிய கில்லர்ஜியை வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு பஞ்சமில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பஞ்சமில்லா வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. கில்லர்ஜியின் கற்பனைக்குப் பஞ்சமே இல்லை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஞ்சமில்லாத ஐயாவின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  9. தங்களிடம் வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை
    என்பதை புரிந்தோம்....நண்பரே

    பதிலளிநீக்கு

  10. நம் நாட்டில் அரசியல் வாதிகளுக்கு எப்பொழுதுமே பஞ்சமே கிடையாது
    உண்மைதான்.

    ஒரு மேற்கோள் .

    "The trouble with this country is that there are too many politicians who believe, with a conviction based on experience, that you can fool all of the people all of the time."

    Franklin P. Adams (1881–1960), American journalist and humorist

    நம்ம நாட்டுக்கு எப்படி பொருந்துது பார்த்தீகளா ??

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா உலகம் முழுவதுமே மக்களை ஏமாற்றியே வாழலாம் என்ற கொள்(ளை)கையாளர்கள் உள்ளதை திரு.ஃப்ராங்லின் பி. ஆட(த)ம்ஸ் அன்றே சரியாகத்தான் சொல்லி வைத்துள்ளார்.

      இவ்வளவு சரியாக கணித்து இருக்கின்றாரே.... இவர் சோலந்தூர் சோசியர் சோனைமுத்துவின் வம்சாவழியினராக இருக்குமோ ?
      வருகைக்கு நன்றி தாத்தா.

      நீக்கு
  11. பஞ்சமே இல்லைதான் ஜி!!! நீங்கள் சொல்லுவதற்கெல்லாம்...உங்கள் பதிவுகளுக்கும் பஞ்சமில்லைதான்...அருமை ஜி...அது சரி எங்கள் நாட்டில் சண்டைகளுக்குப் பஞ்சமில்லை அதனால் நீதித் துறைக்கும் பஞ்சமில்லை என்று இருந்தால்...இன்னும் சரியாக இருக்குமோ...(அதாவது கோர்ட்ல கேஸ் ஓடினாத்தானே அந்த வளாகத்திற்கே பஞ்சம் இருக்காது..அதான்)

    எங்கள் நாட்டில் நீராதாரத்திற்குப் பஞ்சமில்லை
    ஆனால் நல்ல குடிநீருக்குப் பஞ்சமுண்டு
    கோயில் உண்டியலுக்குப் பஞ்சமில்லை
    ஆனால் கோயில் வாசலில் பஞ்சமுண்டு

    அரசியல்வாதிகளுக்குப் பஞ்சமில்லை
    ஆனால் நல்ல தலைவருக்குப் பஞ்சமுண்டு

    ரொம்ப நல்லாருக்குது ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாங்கள் சொல்வதுபோல நீதித்துறைக்கு பஞ்சமில்லை என்று எழுதலாம்தான் நான் அடிப்படையான சட்டக் கல்லூரிகளையே தூக்க நினைக்கின்றேன் இதை மையமாக வைத்துதான் நான் தொடங்கி வைத்த ‘’கடவுளைக் கண்டேன்’’ தொடர் பதிவில் ஜனாதிபதி தொலைக்காட்சியில் உரையாற்றுகின்றார் நாட்டில் குறைந்து வரும் கொலை, கொள்ளை குற்றங்களால் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க மாணவர்கள் சட்டத்துறை, நீதித்துறைகளை விட்டு வேறு துறைகளை தேர்ந்தெடுத்து படித்து அரசு வேலைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று...

      நான் அடிப்படையை மாற்ற நினைக்கின்றேன் தமிழன் சீமான் மாதிரி (ஹி.. ஹி.. ஹி.. நானும் அக்மார்க் தமிழன்தாங்கோ)

      அன்றைய பதிவில் அப்படி சொல்லி விட்டு இன்று மாற்றிச்சொல்ல நான் தமிழ் நாட்டு அரசியல்வாதியா ?
      கோயில் உண்டியல் ஸூப்பர், சில விடயங்களை மறந்து விட்டேன் (தமிழ் நாட்டு அரசியல்வாதிபோல்)
      தீவிரவாதிகளுக்கு பஞ்சமில்லை....
      அதில் தீமைகளுக்கும் பஞ்சமில்லை...

      நீக்கு
  12. வணக்கம் ஜி !

    பஞ்சமில்லை பஞ்சமில்லை பாரதியைப் போல
    பைந்தமிழில் பாட்டிசைத்தீர் பாமரனும் நாண
    வஞ்சமில்லை உன்னகத்தில் வெடிக்கிறது கோபம்
    வஞ்சகரின் ஆட்சியிலே வாழ்வதுவும் சாபம்
    அஞ்சவில்லை அநியாயம் எடுத்துரைக்க நீங்கள்
    அதையுணர்ந்தால் தமிழ்நாட்டில் அடாவடிகள் இல்லை
    மஞ்சமில்லை மலர்களில்லை மணக்கோலம் பூணும்
    மாப்பிளையாம் அரசியலும் மறந்திடுங்கள் போதும் !


    மிகவும் அருமை ஜி உங்களுக்குள் இப்படியும் ஓராற்றல் இருக்கிறதே வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவிதை இங்கு மோகன ராகக்த்தில் ஒலிக்கிறது.
      கேளுங்கள்.
      www.youtube.com/watch?v=LQAACnjpCmA

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. மோகனம் அருமை ,சுப்பு தாதாவின் குரலில் கேட்க ,நானும் ஒருபாடல் எழுதலாம் போலிருக்கே :)

      நீக்கு
    3. வருக பாவலரே..
      ‘’பா’’வரிகளால் கருத்து மழை பொழிந்தீர்
      படித்து பரவச மகிழ்ச்சியை தந்தீர்
      வாழ்க வளமுடன் நன்றி பாவலரே...

      நீக்கு
    4. தாத்தா தளம் சென்று கேட்டேன் அருமை நன்றி

      நீக்கு
    5. மோகன ராகம் கேட்க மீள் வருகை தந்த ஜிக்கு நன்றி

      நீக்கு
  13. அருமையான நாட்டுநலக் கவிதை.
    த ம 9

    பதிலளிநீக்கு
  14. எங்கள் நாட்டில் அடிக்கிற வெயிலுக்கும் பஞ்சமில்லை. அருமை .நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் மழை வரும் நண்பரே ரமணன் சொன்னார்

      நீக்கு
  15. நாளும் எழதும் உங்கள் பதிவுக்கும் பஞ்சமில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் வருகைக்கும் பஞ்சமில்லை நன்றி

      நீக்கு
  16. ஹூம்! :( மக்கள் தொகைக்கும் பஞ்சமில்லை தான்; ஆனால் உழைப்பு? உண்மையான உழைப்பு! அது எங்கே கிடைக்குது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான் எல்லாவற்றுக்கும் நாம்தானே காரணம் ?

      நீக்கு
  17. எங்கள் நாட்டில்
    மெய்யுரைத்த முடியாட்சி மன்னருக்கும் பஞ்சமில்லை!..
    இதே நாட்டில்
    பொய்யுரைக்கும் குடியாட்சி புல்லருக்கும் பஞ்சமில்லை!..

    எங்கள் நாட்டில்
    குரல் தெறிக்க நீதி சொல்லும் தொண்டருக்கும் பஞ்சமில்லை..
    இதே நாட்டில்
    குடல் கிழித்து கொலை செய்யும் குண்டருக்கும் பஞ்சமில்லை..

    திருக்கை வாலால் அடித்த மாதிரி இருக்கும் -
    சொரணை உள்ளவர்களுக்கு ..

    ஆனாலும், நமக்கு கடைசியில் -
    இதையெல்லாம் தட்டச்சு செய்த வலி மட்டும்தான் மிச்சம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி முடிவில் சொன்னீர்களே... அதுதான் உண்மை இருப்பினும் நம்மால் இவைகளை தடுக்க முடியாவிடினும் துளியளவினும் முயன்றோமே என்ற ஆத்ம திருப்தி இதற்காகத்தானே எழுதுகின்றோம் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  18. பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  19. மனிதத்திற்குப் பஞ்சமில்லாத அரசு வந்து ஆளட்டும்.
    எல்லாப் பஞ்சமும் ஒளியும் சகோதரா.
    வாழ்த்துகள்.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி கவிஞரே

      நீக்கு
  20. நான் சொல்ல நினைத்ததை முனைவர் B.ஜம்புலிங்கள் அவர்கள் சொல்லிவிட்டார். உங்களுக்கு பதிவிட கருத்துக்கும் பஞ்சமில்லை. கற்பனைக்கும் பஞ்சமில்லை. பதிவிற்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்துரைத்து பாராட்டியமைக்கும் நன்றி

      நீக்கு
  21. அன்னியரின் வஞ்சகவலைக்கு விலைபோகும்
    வஞ்சகருக்கும் பஞ்சமில்லை... என்று ஒரு வரி சேர்த்திருக்கலாம்... அருமை அருமை நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வரிகளும் நன்று

      நீக்கு
  22. பஞ்சமில்லைதான் நண்பரே
    வறுமைக்கும் பஞ்சமில்லை
    அடிமைத் தனத்திற்கும பஞ்சமில்லை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  23. பஞ்சமில்லை பஞ்சமில்லை...ஆஹா...உண்மை தான்

    ஜியின் கவிதைக்கும் பஞ்சமில்லை தான். சூப்பர் சகோ கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ இப்படி தாமதமாக வந்தால் நான் எப்போ அடுத்த பதிவு இடுவது ?

      நீக்கு
  24. பஞ்சமா பாதங்களுக்கும் பஞ்சமில்லை [[[ அருமையான பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  25. அட அட அட! பிய்த்து விட்டீர்கள் கில்லர்ஜி!! சில இடங்களில் வரிகள் தாளக்கட்டுக்கு அடங்காமல் போனாலும் கருத்தாழத்துக்குப் பஞ்சமில்லை! என் கைத்தட்டல்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் கைதட்டல்களுக்கும் நன்றி

      நீக்கு
  26. நீங்க இருக்குமிடத்திலே வெயில் அதிகமா? நீங்க ரொம்பவே சூடா இருக்கீங்க... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் தொடக்கம்தான் நண்பரே சூடு பிடித்தால் கவிதை வேறு மாதிரி வரும் பொருத்திருங்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  27. வணக்கம்
    ஜி
    கற்பனை நன்று இத்தனை கட்சிகள் காட்சிக்கு...படித்து மகிழ்ந்தேன் ஜி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு